‘பொருளியல் சுழற்சியை சிங்கப்பூர் சமாளிக்கவேண்டும்’

சிங்கப்பூரின் பொருளியல் பல சுழற்சிகளைக் கடந்து செல்லும். அதனைச் சமாளிக்க நமது அர சாங்கம் தயாராக உள்ளது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு மேற்கொண் டிருக்கும் 11 நாள் பயணத்தின் இறுதி நாளில் சான் ஃபிரான்சிஸ் கோவில் சிங்கப்பூர் செய்தியா ளர்களிடம் அவர் பேசினார்.
“அதைச் சமாளிக்க நாம் நாண யச் சுழற்சியையும் நிதிச் சுழற்சியை யும் பயன்படுத்தும் தேவை ஏற்பட் டால், அதையும் நாம் செய்வோம்,” என்று திரு ஹெங் நேற்று முன் தினம், பொருளியல் மந்தநிலைக் கான அறிகுறிகள் தென்படுவது தொடர்பில் அரசாங்கத்திடம் ஏதே னும் திட்டம் உள்ளதா என்று கேட் கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதி லளித்தார்.
“உலகப் பொருளியலிலும் சிங் கப்பூர் பொருளியலிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகவும் பிரதான கட்டமைப்பு மாற்றங்களில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்தி வரு வது அதிமுக்கியம்.
“தொழில்துறை உருமாற்றத்தை நாம் கவனித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் அதில் நமது வளங்களை எவ்வாறு ஒன்று சேர்த்து செயல்படுவது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். அது நமது பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
“தொழில்நுட்பப் புத்தாக்கத்தில் முன்னேற்றம் காண்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சிங் கப்பூரை உலக நாடுகள் நாடி வரும் ஆசியாவின் தொழில்நுட்பப் புத்தாக்க மையமாக உருவாக்க வேண்டும்,” என்று அமைச்சர் விளக்கினார்.