மோசமான மானபங்கச் செயல் புரிந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் 34 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் மின்தூக்கியில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரால் தாம் மானபங்கப்படுத்தப்பட்ட தாக இம்மாதம் 20ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாது ஒருவர் போலிசில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து போலிசார் மேற்கொண்ட தீவிர புலனாய்வு மூலமும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமும் மத்திய போலிஸ் பிரிவு மற்றும் போலிஸ் உளவுத்துறை குற்றச்செயல் புரிந்த ஆடவரின் அடையாளத்தை உறுதி செய்தனர். பின்னர் அதே நாள் இரவு 9.30 மணிக்கு சாய் சீ ரோட் டில் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். ஆடவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகளுக் குக் குறையாத, பத்து ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறையும் பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
மோசமான மானபங்கக் குற்றம் புரிந்ததாக ஆடவர் கைது
1 mins read

