25,000 தெரு விளக்குகளால் இனி சாலைகள்அதிக பிரகாசமாக இருக்கும்

மத்திய சிங்கப்பூர் பகுதியில் உள்ள சாலைகள் இனி அதிக பிரகாசமாக இருக்கும். அங்குள்ள 25,000 தெரு விளக்குகள், $76.3 மில்லி யன் செலவில் 'எல்இடி' விளக்குகளைக் கொண்டு மாற்றப்படுவதால் தெருக்கள் இனி பளிச்சென்று இருக்கும் (படம்).
தற்போதுள்ள தெரு விளக்குகளைவிட புதிய தெரு விளக்குகள் 30 விழுக்காடு அதிக பிரகாசமாக இருக்கும் என்றும் அவை இவ்வாண்டு இறுதிக்குள் மாற்றப்படும் என்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தீவு முழுவதும் உள்ள 110,000 தெரு விளக்குகளை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதிதான் மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை.
"எல்இடி விளக்குகள் தற்போதைய தெரு விளக்கு களைக் காட்டிலும் 25% கூடுதலாக எரிசக்தியைச் சேமிக் கும். தற்போது தெரு விளக்குகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை செயல்படுவதாக அமைக்கப்பட்டுள் ளது. புதிய திட்டத்தின்படி தெரு விளக்குகள் சாலை விளக்கொளியைப் பொறுத்து முடுக்கிவிடப்படும்," என்று ஆணையத்தின் பேச்சாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!