சுடச் சுடச் செய்திகள்

கடும் நடவடிக்கை எடுக்க மாணவர்கள் கோரிக்கை 

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக (என்யுஎஸ்) மாணவி மோனிக்கா பே கடந்த நவம்பர் மாதத்தில் யூசோஃப் ஹால் தங்கும் விடுதி யில் குளிப்பதை இன்னொரு ஆட வர் காணொளி எடுத்த சம்பவம் இப்போது பெரும் புயலாக வெடித் துள்ளது.

அவ்வாறு காணொளி எடுத்த மாணவர் மீது பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனுவில் கிட்டத்தட்ட 30,000 பேர் கையெ ழுத்திட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை தொடங் கப்பட்ட முதலாவது மனுவுக்கு 21,600க்கு மேற்பட்ட கையெழுத்து கள் கிடைக்கப்பெற்றன. 

அதில் பல்கலைக்கழக வளா கத்துக்குள் பாலியல் குற்றங்கள் புரிவோருக்கு எதிராகக் கடுமை யான தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் காணொளி எடுத்தவரை பல்கலைக்கழகத்தி லிருந்து நீக்குமாறும் பாலியல் குற் றங்கள் புரியும் ஆண், பெண் இரு பாலாரையும் சமமாகத் தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

தொடர்பு மற்றும் புதிய ஊடகத் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி குளித்துக்கொண்டி ருந்தபோது கதவுக்குக் கீழ் கைபேசியை வைத்து காணொளி எடுக்கப்படுவதைக் கவனித்தார்.
அவ்வாறு செய்த ரசாயனப் பொறியியல் மாணவர் என்று நம் பப்படும் ஆடவர் மீது பல்கலைக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை என்று கோபம் கொண் டார்.

குற்றம் புரிந்த அந்த ஆடவரிடம் பல்கலைக்கழகம் மன்னிப்பு கடிதம் எழுதுமாறு கேட்டுக்கொண்டதாக வும் கட்டாய ஆலோசனைக்குச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது என்றும் குமாரி பே கூறினார்.
மேலும் யூசோஃப் ஹாலுக்குள் நுழைய அவருக்குத் தடை விதிக் கப்பட்டதுடன் ஒரு தவணைக்கு அவர் பல்கலைக்கழகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

இரண்டாவது மனுவில் மேலும் 8,200 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் போலிஸ் இந்த வழக் கில் தலையிட்டு ஆடவருக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை என்யுஎஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்தச் சம்பவத்தை போலிஸ் விசாரித்து வருகிறது என்றும் அந்த ஆடவ ருக்கு 12 மாத நிபந்தனை எச்ச ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.
இதற்கிடையே, வரும் வியா ழக்கிழமையன்று என்யுஎஸ் மாபெ ரும் சந்திப்புக் கூட்டத்துக்கு ஏற் பாடு செய்துள்ளது. இதில் மாண வர்கள், துறைத் தலைவர்கள், பல் கலையின் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.
“நாங்கள் நடத்திய விசாரணை யின் முடிவு, ஒழுங்குமுறை நடவ டிக்கை ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வோம்,” என்று என்யுஎஸ் அவர்களிடம் கூறியது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon