சுடச் சுடச் செய்திகள்

உரிமமில்லா உடற்பிடிப்பு நிலையங்கள்: 32 பெண்கள் கைது

தஞ்சோங் பகார், சவுத் பிரிட்ஜ் ரோடு, மேகஸின் ரோடு ஆகிய சாலைகளில் உள்ள உரிமமில்லா உடற்பிடிப்பு நிலை யங்கள், கேளிக்கைக் கூடங்கள் ஆகியவற்றில் இம்மாதம் 18, 19ஆம் தேதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 18 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட 38 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய போலிஸ் பிரிவு நடத்திய அமலாக்க நடவடிக்கை யில் உரிமமில்லா மூன்று உடற்பிடிப்பு நிலையங்கள் சிக் கின. அவற்றில் பணியாற்றிய 24 வயதுக்கும் 40 வயதுக் கும் இடைப்பட்ட ஏழு பெண்கள் மாதர் சாசனம் தொடர்பி லான குற்றங்களுக்கும் 26 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து பெண்கள் மாதர் சாசனம் மற்றும் குடி நுழைவுக் குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டனர். 

முறையான உரிமம் இல்லாமல் நடத்தப்பட்ட இரண்டு கேளிக்கை விடுதிகளும் சிக்கின. அதில் பணியாற்றிய 18 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்ட 20 பெண்கள் வெளிநாட்டு மனிதவளச் சட்டம் தொடர்பான குற்றங்களுக் காக கைது செய்யப்பட்டனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon