சுடச் சுடச் செய்திகள்

வெளியுறவு அமைச்சு: அவசியமில்லா இலங்கைப் பயணத்தைத் தவிர்க்கவும்

மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அங்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து குறைந்தது 290 பேர் மாண் டனர், 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இலங்கை அரசாங்கம் நேற்று நள்ளிரவிலிருந்து அங்கு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. 

அங்கு மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில், சில வெளிநாட்டு வெளியுறவு அமைச்சுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை மிகவும் கவனமாக இருக்கு மாறு கேட்டுக்கொண்டுள்ளன என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட பயண ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்தது.

“நீங்கள் தற்போது இலங்கையில் இருந்தால் அனைத்து சுய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அங்குள்ள செய்திகளை மிகவும் உன்னிப்பாகக் கவனியுங்கள். உள்ளூர் பாதுகாப்பு அமைப் புகள் கூறும் ஆலோசனைகளைக் கேளுங்கள். அதிக மககள் கூடும் பொது இடங்களைத் தவிர்த்துவிடுங்கள். உங்கள் குடும்பத்தாருடன் தொடர்பில் இருங்கள். அப்போது தான் நீங்கள் பாதுகாப்புடன் இருக்கிறீர்கள் என்று அவர் களுக்குத் தெரியும்,” என்றும் ஆலோசனைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

சிங்கப்பூரர்கள் https://eregister.mfa.gov.sg எனும் வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளவும் சிங்கப்பூரர்களை அமைச்சு கேட்டுக்கொண்டுள் ளது. உதவிக்கு +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111 என்ற எண்களில் இலங்கையில் உள்ள அமைச் சின் துணைத் தூதரகத்தையும் +65 63798800/8855 என்ற எண்களில் வெளியுறவு அமைச்சையும் தொடர்புகொள்ளலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon