பெங்களூருவில் சிக்கித் தவித்த 'ஸ்கூட்' பயணிகள்

பெங்களூருவில் சிக்கித் தவித்த 'ஸ்கூட்' பயணிகள்

1 mins read
a650ee24-3203-4137-9eba-fc42544b238f
-

போலியான பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக, சிங்கப்பூருக்குப் புறப்படவிருந்த ஸ்கூட் விமானப் பயணிகள் பெங்களூரு விமான நிலையத்தில் பல மணி நேரம் சிக்கியிருந்தனர்.

உள்ளூர் நேரப்படி பின்னிரவு 1.20 மணிக்கு பெங்களூருவைவிட்டுப் புறப்படவேண்டியிருந்த 'டிஆர்573' விமானம் இறுதியில் 14 மணி நேரத்திற்குப் பிறகு மறுநாள் பிற்பகல் சுமார் 3.30 மணிக்குப் புறப்பட்டது.

பல மணி நேரம் காத்திருந்து, தாமதம் குறித்து எந்த விளக்கத்தையும் பெறாத நிலையில் பயணிகள் பலர் விரக்தி அடைந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.