சுடச் சுடச் செய்திகள்

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ‘புளூஎஸ்ஜி’ மின்னூட்டுச் சாதனங்கள்

மின்சார கார் பகிர்வு நிறுவனமான ‘புளூஎஸ்ஜி’யின் 99 மின்னூட்டு இடங்களைப் பொதுமக்கள் நேற்று பிற்பகல் மூன்று மணி முதல் பயன்படுத்தத் தொடங் கலாம். ‘புளூஎஸ்ஜி’ இங்கு செயல்படத் தொடங்கி 18 மாதங்கள் ஆன பின்னர் அந்நிறு வனம் இதனை அறிவித்துள்ளது. 

‘புளூஎஸ்ஜி’ கட்டமைப்பில் மொத்தம் 191 நிலையங்களும் 755 மின்னூட்டுச் சாதனங்களும் உள்ளன.  2020ஆம் ஆண்டுக் குள் 400 மின்னூட்டச் சாதனங் களைப் பொதுமக்களின் பயன் பாட்டுக்காக விடப்போவதாக நிறுவனம் முன்னர் அறிவித்திருந் தது. இந்தச் சேவையைப் பயன் படுத்த விரும்பும் தனியார் வாகன உரிமையாளர்கள் ‘புளூஎஸ்ஜி’யின் இணையத்தளம் அல்லது செயலி வழியாக விண் ணப்பிக்கலாம் என்று அந்நிறு வனம் தெரிவித்தது. 

இந்தச் சேவையைப் பயன் படுத்த விரும்புவோர், முதல் மூன்று மணி நேரத்திற்கு மணிக்கு ஒரு வெள்ளி செலுத்த வேண்டும். 

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, இக்கட்டணம் மணிக்கு இரண்டு வெள்ளியாக இருக்கும். உறுப்பினராக விரும்புவோர் அதற்கான வருடாந்திர கட்டண மாக $20 செலுத்த வேண்டும்.

‘புளூஎஸ்ஜி’ இணையத்தளம் மற்றும் செயலி வழியாக மின்னூட் டுச் சாதனங்களைப் பயன்படுத்த 45 நிமிடங்கள் வரை முன்னதாக விண்ணப்பிக்கலாம்.

இதுவரை ‘புளூஎஸ்ஜி’ நிறு வனம் 450 மின்சார கார்களையும் 30,000 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. டிசம்பர் 2017ஆம் ஆண்டு முதல் நிறு வனத்தின் கார்கள் 200,000 முறைக்கு மேல் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

ஹேக் சாலையில் அமைந்துள்ள ஒரு மின்னூட்டு இடம். 
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon