ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும் 'பி அன் இ பிளாஞ்ச் பிரைவெட் லிமிடெட்' போக்குவரத்து நிறுவனத்தை கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் $28.3 ஆஸ்திரேலிய வெள்ளியில் வாங்கியுள்ளது. கம்ஃபர்ட்டெல்குரோ கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் வாங்கியுள்ள ஆறாவது நிறுவனம் இது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் வாங்கியிருக்கும் ஐந்தாவது நிறுவனமாகவும் இது உள்ளது. 'பிளாஞ்ச்' நிறுவனம் மொத்தம் 48 பேருந்துகளையும் வண்டிகளையும் இயக்கி வருகிறது. அவை யாவும் பள்ளிப் பேருந்துகளாகவும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பேருந்துகளாகவும் இயங்கி வருகின்றன. அத்துடன் வாடகைக்குப் பெறக்கூடிய சேவையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே 2005ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய சந்தையில் கால் பதித்த கம்ஃபர்ட்டெல்குரோ, தற்போது பேருந்துகள், வண்டிகள், டாக்சிகள், மருத்துவ வண்டிகள் என கிட்டத்தட்ட 4,300 வாகனங்களை அங்கு இயக்கி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் கால்பதித்து வரும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம்
1 mins read
-

