'சுற்றுப்பயணிகள் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்'

'சுற்றுப்பயணிகள் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவோம்'

1 mins read
1c41cdd1-59d4-4795-9876-674b32aff8d4
PHOTO: BOARD N' PLAY/FACEBOOK -

செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் சேவையை வழங்கி வரும் 'போர்ட் அன் பிளே' நிறுவனம் சுற்றுப்பயணிகளைத் தன் தொண்டூழியர்களாகத் தொடர்ந்து பயன்படுத்தும் என்று நேற்று கூறியது. செந்தோசாவில் சென்ற புதன்கிழமையன்று ஒரு வயது நிரம்பிய நாய் ஒன்று நீரில் மூழ்கியது. நாய் அப்போது நிறுவனத்தைச் சேர்ந்த பராமரிப்பாளர் கண்காணிப்பில் இருந்தது. நிறுவனம் அதன் தொண்டூழியர்களாகச் சுற்றுப்பயணிகளின் சேவையைப் பயன்படுத்தி வருவதை அறிந்த பலர் இணையத்தில் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்தனர். சேவைக்கு ஈடாக இச்சுற்றுப்பயணிகளுக்குத் தங்கும் வசதியும் உணவும் பயண அட்டைகளும் இலவசமாகத் தரப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, சுற்றுப்பயணிகளின் சேவையை இவ்வாறு பயன்படுத்துவதற்கு எதிராகச் சட்டம் ஏதுமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கண்டறிந்துள்ளது.