வரலாற்றிலிருந்து கற்றுக்கொள் ளக்கூடிய பாடங்கள், எதிர்காலத் திற்கான வழிகாட்டியாக அமைய லாம் என்று தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் நேற்றைய நிகழ்வில் கூறினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் (என்யுஎஸ்), 'பண்டைய துறைமுகங்கள்' என்ற கருப் பொருளில் இரண்டு நாள் மாநாட் டைத் தொடங்கி வைத்த திரு மாலிக்கி இவ்வாறு கூறினார்.
"ஆசிய வர்த்தகத்தில் பழங் காலந்தொட்டே பெயர்பெற்ற துறை முகமாக விளங்கும் சிங்கப்பூர், வரலாற்றின் பல்வேறு முக்கியக் கட்டங்களில் தவறான முடிவை எடுத்து அதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கலாம். அதன் இடம் ஜகார்த்தாவுக்கும் பினாங்குக்கும் இடைப்பட்ட இன்னொரு துறை முகத்திற்குச் சென்றிருக்கலாம்," என்று சுட்டினார் அமைச்சர்.
"தற்போது நெருக்குதலுக்கு ஆளாகியுள்ள பழைய கட்டமைப்பு கள், தொடர்ந்து இயங்கவும் மேலும் திறம்படச் செயல்படவும் புதுப் புது யோசனைகள் தேவை. கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாக ஆற்றல்மிக்க துறைமுகமாக சிங்கப்பூர் தன் நிலையைத் தக்க வைத்துக்கொள்வதில் அடங்கி உள்ள பண்புகளை எதிர்காலத்திற் கும் எடுத்துச்செல்வதற்குக் கடந்த காலத்தைப் புரிந்துகொள்வது உதவும்," என்றார் திரு மாலிக்கி.
இருநூற்றாண்டு நிறைவை முன்னிட்டு தேசிய மரபுடைமை கழகத்தின் ஆதரவில் என்யுஎஸ்சின் தென்கிழக்காசிய ஆய்வுப் பிரிவின் ஏற்பாட்டில் 'ராஃபிள்சுக்கு முன் சிங்கப்பூர்: தொல்பொருள் ஆராய்ச்சியும் கடல்களும்' என்ற மாநாடு நடை பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 180 பேர் கலந்துகொள்ளும் இம்மாநாட்டில் 18 அனைத்துலக கல்விமான்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்கின்றனர்.

