நிதித்துறையில் உள்ள பெரும்பாலான வேலைகள், தொழில்நுட்பத்தின் காரணத்தால் ஒன்றிணைக்கப்படலாம் அல்லது மாற் றம் செய்யப்படலாம். இதனால் நிதித்துறை ஊழியர்கள் புதிய திறன் மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வங்கிப் பரிவர்த்தனை, நிதிக் கழகமும் நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
நிதித்துறையில் மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைகளும் வழக்கற்றுப் போகக்கூடிய வேலை களும் இனித் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்திற்கு ஆளாகலாம்.
அடுத்த மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் நிதித்துறையில் உள்ள கிட்டத்தட்ட 121 வேலை களில் கடன் அதிகாரிகள், நிதிக் கணக்காளர்கள், பொருள் நிர் வாகிகள் போன்ற 100 வேலைகள் தானியக்கமாகலாம். இவ்வேலை கள் தரவு பகுப்பாய்வு முறைக்கும் ஆளாகலாம் என இரு நிறுவனங்களும் கூறின. தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் ஒவ்வொரு பணி யிலும் ஏற்படக்கூடிய மாற்றங் களைச் சமாளிக்க எத்தகைய திறன்கள் தேவை என்பதையும் அறிக்கை குறிப்பிட்டது. ஆனால் தரவு பகுப்பாய்வு முறையாலும் தானியக்கத் தாலும் நிதித்துறையில் ஊழியர் எண்ணிக்கை பாதிப்புறாது என்றும் அறிக்கை சுட்டியது.
வாழ்நாள் கற்றலின் தேவையை அடையாளங்கண்டு ஊழியர்கள் வேலையிடத்தில் தங்களை மேம் படுத்திக்கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும். அத்துடன் தரவு பகுப்பாய்வு முறையாலும் தானியக் கத்தாலும் ஏற்படக்கூடிய மாற்றங் களை எதிர்கொண்டு தொடர்ந்து வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு கற் றலில் ஊழியர்கள் ஈடுபடவேண்டும் என்றும் கூறப்பட்டது.

