கண்பார்வையற்ற மூத்தோருக்குக் கடந்த காலத்தை நிழலாடச் செய்த நடைப்பயணம்

கண்பார்வையற்ற மூத்தோருக்குக் கடந்த காலத்தை நிழலாடச் செய்த நடைப்பயணம்

1 mins read
283d13ac-2707-4a84-bffc-662a1019635d
கம்போங் கிளாம் வட்டாரத்தை நேற்று வலம் வந்த கண்பார்வையற்ற மூத்த குடிமக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கண்பார்வையற்ற இருபது மூத்த குடிமக்கள் நேற்று கம்போங் கிளாம் வட்டாரத்தை வலம் வந்தனர். இவர்கள் 'காய்ட் டாக்ஸ் சிங்கப்பூர்' எனப்படும் சிங்கப்பூர் வழிகாட்டு நாய்கள் சங்கத்தின் உறுப்பினர்கள். தேசிய மரபுடைமை வாரியம், 'சேஜ்' ஆலோசனை மையத்துடன் இணைந்து தொடங்கியுள்ள 'ரெமினிசென்ஸ் வாக்ஸ்' என்ற திட்டத்தின்கீழ் நேற்று இரண் டாவது நடைப்பயணம் நிகழ்ந்தது.

முதல் நடைப்பயணம் சன் யாட் சன் நன்யாங் நினைவு மண்டபத் திற்குச் செல்வதாக அமைந்தது. நேற்று நிகழ்ந்த இரண்டாவது நடைப்பயணம் மலாய் மரபுடைமை நிலையத்திற்கும் அடுத்து வர இருக்கும் மூன்றாவது நடை பயணம் இந்திய மரபுடைமை நிலையத்திற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஏற்பாடு செய்யப் படும் நடைப்பயணங்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் மாதம் இருமுறை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.