திருந்தி வாழும் சாத்தியத்தால் குறைந்த தண்டனை

திருந்தி வாழும் சாத்தியத்தால் குறைந்த தண்டனை

2 mins read
7a75c76e-97f6-4d06-85ac-c72bd2958f2c
-

சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 23 வயது மாணவருக்கு நிபந்தனையுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப்பட்ட முடிவை போலிசார், நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் விளக்கியுள்ளனர். குற்றம் சாட்டப் பட்டவர் தனது செயல் குறித்து வருத்தமடைந்ததாகவும் அவர் திருந்தி வாழும் சாத்தியம் அதிகம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடு கிறது.

"குற்றம் சாட்டப்பட்ட மாண வனின் நடத்தை குறித்த கூடு தலான சில காரணங்கள் இவ்விவ காரத்துடன் தொடர்புடையவை. அவரது கைபேசியில் வேறு ஆபாசப் படங்கள் இல்லாதது இந்தக் காரணங்களில் ஒன்று," என்று போலிசார் கூறினர்.

அந்த இளையர் மீது குற்றவியல் விசாரணை தொடரப்பட்டால் அவரது எதிர்காலம் பாழாகிவிட லாம் என்றனர் போலிசார்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை யுடன் கூடிய எச்சரிக்கை விடுக்கப் பட்டதாக போலிசார் கூறினர். நிபந்தனை எச்சரிக்கையின்படி, அவர் 12 மாதங்களில் வேறெந்த குற்றச்செயலிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அவர் முன்பு செய்திருந்த குற்றத்திற்காகவும் அடுத்ததாக புரிந்த குற்றச் செயலுக்காகவும் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குவார்.

இதனால் அவர் சிறைக்குச் செல்லும் சாத்தியமும் அதிகரிக் கலாம். அந்த ஆடவரின் பெயர் நிக்கலஸ் லிம் என்று பாதிக்கப்பட்ட மாணவி மோனிக்கா பே தெரிவித் தார். இந்தத் தகவல் வெளிவந் ததைத் தொடர்ந்து 'கிரேட் ஈஸ்டர்ன்' காப்புறுதி நிறுவனத்தில் நிதி ஆலோசகராகப் பணிபுரிந் திருந்த லிம்மை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஆடவருக்குச் செல்வாக்குமிக்க பெற்றோர் இருப்பதால் அவர் நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட வில்லை என்ற தகவல் தவறானது என்று போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. "இது போன்ற பொய்த் தகவல்கள் வெளிவருவது துரதிர்ஷ்ட வசமானது," என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

லிம்மின் தந்தை பொதுப் போக்குவரத்து துறையில் வாகனம் ஓட்டுநராக உள்ளார் என்றும் தாயார் இல்லத்தரசி என்றும் அறிக்கை கூறியது.

கடந்த நவம்பர் மாதத்தில் யூசோஃப் ஹால் விடுதியில் குமாரி பே குளித்துக்கொண்டிருந் ததை மறைவிலிருந்து காணொளி எடுத்தார் லிம்.