தேசிய பல்கலைக்கழகம்; மூன்று ஆண்டுகளில் 26 பாலியல் குற்றச்சம்பவங்கள்

தேசிய பல்கலைக்கழகம்; மூன்று ஆண்டுகளில் 26 பாலியல் குற்றச்சம்பவங்கள்

1 mins read
9fe7f3fa-bd8e-4259-b5aa-9c8c572cce8d
-

தேசிய பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திடம் 26 பாலியல் குற்றச்சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

மாணவர்களும் மாணவிகளும் குளிப்பதை தகாத விதத்தில் படங்கள் அல்லது காணொளிகள் எடுக்கப்பட்டதாக 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மானபங்கம், மாணவிகளைத் தகாத முறையில் தீண்டுதல் உள்ளிட்ட ஐந்து சம்பவங்களை அறிக்கை குறிப்பிடுகிறது. அத்துமீறி நுழைதல், பெண்களின் உள்ளாடைகளைக் களவாடுதல் உள்ளிட்ட மூன்று சம்பவங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் மாணவர்கள் குறித்த தனது கொள்கையை மறுஆய்வு செய்யப்போவதாக தேசிய பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மேல் விவரங்கள், நாளைய தமிழ் முரசில்.