ரயில், பேருந்து சேவைகள் இயங்கும் நேரம் அடுத்த செவ்வாய்க்கிழமை நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட்டும் எஸ்எம்ஆர்டியும் தெரிவித்துள்ளன.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் இயக்கத்தில் உள்ள டெளன்ட்டவுன் பாதை, வடக்கு-கிழக்கு ரயில் பாதை, பொங்கோல் செங்காங் இலகு ரயில் சேவைகள் ஆகியவை அடுத்த செவ்வாய்க்கிழமை கூடுதலாக 30 நிமிடங்கள் நீட்டிக்கப்படும். அத்துடன் 21 எஸ்பிஎஸ் பேருந்துச் சேவைகளின் நேரமும் நீட்டிக்கப்படும்.
பொங்கோல், ஹார்பர்ஃபிரன்ட் ஆகிய நிலையங்களிலிருந்து கடைசி ரயில்கள் மே 1ஆம் தேதியில் முறையே பின்னிரவு 12.02 மணிக்கும் 12.30 மணிக்கும் புறப்படவுள்ளன. டௌன்ட்டவுன் பாதையில் புக்கிட் பாஞ்சாங் மற்றும் எக்ஸ்போ நிலையங்களிலிருந்து கடைசி ரயில் முறையே 12.03 மணிக்கும் 12.04 மணிக்கும் புறப்படும்.
இது குறித்த மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ள எஸ்பிஎஸ் டிரான்சிட் இணையத்தளத்தை நாடலாம்.
எஸ்எம்ஆர்டி நடத்தும் வடக்கு-கிழக்கு ரயில் பாதையிலும் கிழக்கு-மேற்கு ரயில் பாதையிலும் கடைசி ரயில் சிட்டி ஹாலிலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும். வட்டப் பாதையில் கடைசி ரயில் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும். ரயில் பாதையின் மறுமுனையில் கடைசி ரயில் டோபி காட் ரயில் நிலையத்தைவிட்டு 11.55 மணிக்குப் புறப்படும். மேல் விவரங்களுக்காக www.smrt.com.sg இணையத்தளத்தை நாடவும்.

