என்டியுசி ஃபுட்ஃபேர், கோப்பித்தியாம் கீழ் செயல்படும் 100க்கும் மேற்பட்ட காப்பிக் கடைகள், உணவு நிலையங்களில் அடுத்த மாதம் முதல் ஊழியர்கள் 50 காசுக்கு காப்பி, தேநீர் பருக முடியும்.
2019ஆம் ஆண்டு ஜூலை முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் வரை மெர்டேக்கா, முன்னோடி தலைமுறை சிங்கப்பூரர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் கழிவு பெறமுடியும்.
தொழிற்சங்க ஊழியர்களுக்கு மே மாதம் முழுவதும் இந்தச் சலுகை வழங்கப்படும்.
அதன் பிறகு இந்தச் சலுகை ஒவ்வொரு புதன்கிழமை மட்டும் நீட்டிக்கப்படும்.
இச்சலுகையினால் 1.7 மில்லியனுக்கு மேற்பட்டோர் பலனடைவார்கள் என்று என்டியுசி எண்டர்பிரைஸ் நேற்று தெரிவித்தது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் மேரி லியாவ், தலைமைச் செயலாளர் இங் சீ மெங், நேற்று விடுத்த மே தினச் செய்தியில் 50 ஆண்டுகள் ஆன பிறகும் ஊழியர்கள் சிறந்த சம்பளத்தைப் பெறவும் அவர்களுடைய நலனைக் காப்பதும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதும் தொழிலாளர் இயக்கத்தின் நோக்கம் தொடர்ந்து நீடிக்கும் என்று நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

