ஊழியர் பயிற்சியில் அதிக நிறுவனங்கள்

ஊழியர் பயிற்சியில் அதிக நிறுவனங்கள்

2 mins read
83a7535d-07d8-496a-b07c-4099de70dd8e
தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் இங் சீ மெங். ST PHOTO: DESMOND WEE -

வேலைகள் உருமாற்றத் திட்டத் தின் ஓர் அங்கமாக ஊழியர் களுக்கு ஏற்ப வேலைகளை வழங்கத் தொழிலாளர் இயக்கம் விரும்புகிறது.

இதற்காக நிறுவனங்களின் பயிற்சித் திட்டங்களில் அதிகம் பங்கேற்க அது விரும்புகிறது. இதன்மூலம் ஊழியர்கள் மேம்பட்ட வேலைவாய்ப்புகளைத் தேடிக்கொள்ள முடியும் என்றும் அது நம்புகிறது.

இதன் தொடர்பில் ஊழியர் கள் தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் புதிய தொழில் நுட்பத்திற்காக தயார் செய்து கொள்வதற்குத் தொழிலாளர் இயக்கம் பல்வேறு முயற்சிகளை எடுக்கும்.

அதிக ஊழியர்களைப் பிரதி நிதிக்கும் வகையில் புதிய தொழிற்சங்கங்களை உருவாக்க வும் அது திட்டமிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஓய்வுக் கால, மறுவேலை வாய்ப்பு ஆகியவற்றின் வயதை முறையே 65, 70 என்று உயர்த்தவேண்டும் என்றும் இயக்கம் அறைகூவல் விடுத்து வருகிறது.

குறிப்பாக முதியோருக்கு உதவ இந்த வயது வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் இங் சீ மெங், மூன்று ஆண்டுகளில் 330,000 ஊழியர்களை எட்டும் வகையில் 1,000 நிறுவனங்களின் பயிற்சிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இது தொழிலாளர்களிடையே தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள் ளவும் அதைப் பயன்படுத்தவும் உதவும் என்று அவர் குறிப் பிட்டார்.

புதிய தொழில்நுட்பத்தைத் தழுவுவதன் வழி நிறுவனங் களுக்கு ஊழியர்கள் நற்பலன் களை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.

சில நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்துக்காக சில நூறு மில்லியன் வெள்ளியைச் செலவிடுகின்றனர்.

ஆனால் பாதியிலேயே ஊழி யர்களுக்குத் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது என் பது தெரியவில்லை.

ஊழியர்களும் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த மறுக் கின்றனர் என்று தேசிய தொழிற் சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங் சொன்னார்.

ஊழியர்களின் வேலையை மேம்படுத்தி உருமாற்றுவதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிலையங்கள் பயிற்சி நிரல்களை வடிவமைத்து தொழிற்சங்கத்துக்காக ஒன்று சேர்த்து உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.