தொழிலாளர் தினத்தன்று இஸ்தானா திறந்துவிடப்படும்

தொழிலாளர் தினத்தன்று இஸ்தானா திறந்துவிடப்படும்

1 mins read
dd790c9b-3eb1-4e4f-9f8d-7662ed77c5cc
PHOTO: ST FILE -

தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி இஸ்தானா பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என அதிபர் அலுவலகம் அறிவித்து உள்ளது. காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை அது திறந்திருக்கும்.

இஸ்தானாவின் 150வது ஆண்டுநிறைவை முன்னிட்டு அதிபர் ஹலிமா யாக்கோப் இஸ்தானாவின் 'லெகோ' மாதிரியை அறிமுகம் செய்ய உள்ளார்.

ஒரு 'லெகோ' மாதிரியின் விலை $70. விற்பனையிலிருந்து பெறப்படும் தொகை அதிபர் சவால் அறநிதிக்குச் செல்லும்.

இஸ்தானாவிற்குள் செல்ல சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அனுமதி இலவசம்.

மற்றவர்கள் $2 கட்டணம் செலுத்தவேண்டும்.