சுடச் சுடச் செய்திகள்

பாதுகாவலரைத் தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள ரோக்ஸி ஸ்குவேர் கடைத் தொகுதியில் பாதுகாவல் மேலதிகாரியைத் தாக்கியதாக பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டூவார்ட் போய்ட் மில்ஸ் (படம்) என்பவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இம்மாதம் 4ஆம் தேதி நடந்த இச்சம்பவம் காணொளியில் பதி வாகி பின்னர் இணையத்தில் வேகமாகப் பரவியது. காணொ ளியில் பாதுகாவலரது முகத்தில் மில்ஸ் குத்தும் காட்சி பதிவானது.
கடைத்தொகுதியின் பிரதான வெளிவாயில் மூடியிருந்தது தொடர்பில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்ட தாகக் கூறப்படுகிறது. இதனால் சினம் அடைந்த மில்ஸ், பாது காவல் மேலதிகாரியை மூர்க்கத் தனமாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தைப் படம்பிடித்த மற்றொரு பாதுகாவலர் போலி சைத் தொடர்புகொண்டதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து மில்ஸ் தப்பிச் சென்றார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான 47 வயது மில்ஸ் மீது வேண்டுமென்றே திரு ஆன்ட்ரூ லிம் எனும் பாதுகாவல் மேலதிகாரியைத் தாக்கியதாகவும் அவ ரைத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon