பள்ளிவாசல் நிதி கையாடல்: முன்னாள் நிர்வாகக் குழு தலைவருக்குச் சிறை

பள்ளிவாசல் நிதி கையாடல்: முன்னாள் நிர்வாகக் குழு தலைவருக்குச் சிறை

1 mins read
85cd684c-f7a6-46d6-8d4b-f97a6f0e5687
தாருஸ்ஸலாம் பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் அப் முத்தலிஃப் ஹா‌ஷிம் ST PHOTO: WONG KWAI CHOW -

காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட்டில் உள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாசலின் முன்னாள் நிர்வாகக் குழுத் தலைவர் அப் முத்தலிஃப் ஹா‌ஷிம் (படம்), 58, அப்பள்ளிவாசலுக்கு நன்கொடை யாக செலுத்தப்பட்ட $370,000 க்கும் அதிகமான ரொக்கத்தைக் கையாடிய வழக்கில் இவருக்கு ஈராண்டு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2006க்கும் 2013ஆம் ஆண் டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இந்த நிதியைக் கையாடிய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக் கப்பட்டது.

முத்தலிஃப் மீது நம்பிக்கை மோசடி தொடர்பாக சுமத்தப்பட்டு இருந்த ஆறு குற்றச்சாட்டுகளை இவர் கடந்த மாதம் ஒப்புக் கொண்டார்.

நன்கொடை பணத்தில் பெரும் பகுதியை முத்தலிஃப் ஏழை மக்களுக்குக் கொடுத்து உதவியதாக அவருடைய வழக் கறிஞர் முன்வைத்த தற்காப்பு வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.

தொண்டூழியர்களும் பராமரிப் பாளர்களும் கொண்டிருந்த நம்பிக்கையை முத்தலிஃப் தவறாகப் பயன்படுத்தியது எளி தாக எடுத்துக்கொள்ளக் கூடிய தல்ல என்பதை நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டினார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வருப வர்கள் நன்கொடையாக பணம் செலுத்த அங்கு பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். தொழுகை முடிந்ததும் பாது காப்புக் காரணங்களுக்காக பெட்டிகளைத் தமது அலுவலகத் திற்குப் கொண்டு வர பள்ளி வாசல் தொண்டூழியர்களிடம் முத்தலிஃப் சொன்னதாக நீதி மன்றத்தில் கூறப்பட்டது.