முதலாளியைப் பலமுறை கத்தியால் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் இந்தோனீசியப் பணிப்பெண்

முதலாளியைக் கொலை செய்த தாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தோனீசியப் பணிப்பெண் தர்யாத்தி, அவரை பலமுறை கத்தி யால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி மரின் பரேட் அருகே தெலுக் குராவில் உள்ள தனியார் வீட்டில் வசித்து வந்த 59 வயதான முதலாளி சியாவ் கிம் சூவை 26 வயது தர்யாத்தி கொலை செய்வதற்குப் பல வாரங் களாகத் திட்டமிட்டதாகக் கூறப் பட்டது.

அந்தக் கொலைத் திட்டங் களின் விவரங்களை தம்முடைய நாட் குறிப்பில் தர்யாத்தி குறித்து வைத்ததாக உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவிக்கப் பட்டது.

வேலை செய்த இரண்டே மாதங்களில் நாடு திரும்பவும் ஹாங்காங்கிலுள்ள தமது காத லரைச் சந்திக்கவும் தர்யாத்தி ஏங்கினார். அந்த விருப்பத்தை நிறைவேற்று வதற்காக முதலாளி இடமிருந்த தமது கடப்பிதழைப் பெறவும் பணத்தைத் திருடவும் அவர் திட்டம் தீட்டினார்.

திருவாட்டி சியாவ் வீட்டில் தனியாக இருந்தபோது அவரைக் கத்திமுனையில் மிரட்டிய தர்யாத்தி கழிவறைக்குள் அவரை இழுத்துச் சென்றாள்.

அங்கே முகம், கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் திருவாட்டி சியாவைப் பலமுறை கத்தியால் சரமாரியாகத் தாக்கினார். தமக்கு ஏற்பட்ட பலத்த காயத்தால் திருவாட்டி சியாவ் தரையில் மயங்கி விழுந்தார்.

மனைவியைக் காணவில்லை என்று தேடிய திருவாட்டி சியாவின் கணவர் திரு ஓங், பின்னர் சந்தேகம் எழுந்து கழிவறையின் கதவைப் பலவந்தமாகத் திறந்தார்.

கதவைத் திறந்தவுடன் திரு ஓங்கின் கழுத்தில் தர்யாத்தி கத்தியால் தாக்கினார். தர்யாத்தி யுடன் போராடிய திரு ஓங், அவரைத் தடுத்து அவரது கையைக் கயிற்றால் கட்டினார்.

சம்பவ இடத்திலேயே திரு வாட்டி சியாவ் உயிரிழந்துவிட்டதை மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர். திருவாட்டி சியாவின் உடலில் 98 வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. தலையிலும் கழுத் திலும் பலமுறை தாக்கப்பட்டதில் திருவாட்டி சியாவ் மாண்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

"முதலாளியை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்ற வெறித்தனத்தில் பணப்பெண் அவரைக் கொடூரமாகத் தாக்கி னார்," என்று அரசு தரப்புத் துணை வழக்கறிஞர் வோங் கோக் வெங் கூறினார்.

திரு ஓங்கை கொலை செய்ய முயன்றதாக இரண்டாவது குற்றச் சாட்டை எதிர்நோக்கும் தர்யாத்தி தரப்பில் வழக்கறிஞர் முகம்மது முஸாம்மில் முகம்மது வாதாடினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தர்யத்திக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!