பிளாஸ்டிக் பையில் கைவிடப்பட்ட வியட்னாமிய குழந்தைக்கு சிகிச்சை

பிளாஸ்டிக் பையில் கைவிடப்பட்ட வியட்னாமிய குழந்தைக்கு சிகிச்சை

2 mins read
96ca41d5-5965-43bd-b88f-d8d0a7b1ba28
-

வியட்னாமில் பிளாஸ்டிக் பையில் கைவிடப்பட்ட பெண் குழந்தை சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறது.

பிறந்து ஒரு சில நாட்களே ஆன குழந்தை ஒன்று கடந்த மாதம் 29ஆம் தேதி வியட்னாமின் காப்பித் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.

குழந்தை அழும் சத்தத்தைக் கேட்ட விவசாயி ஒருவர் அதைக் கண்டுபிடித்து அந்நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தையைச் சேர்த்தார்.

அப்போது அக்குழந்தைக்குக் காயங்கள் ஏற்பட்டு பூச்சிக் கடி யாலும் கிருமித் தொற்றாலும் அது பாதிக்கப்பட்டிருந்தது.

தலை வீங்கியிருந்ததுடன் அதன் கண்களிலும் மூக்கிலும் புழுக்கள் காணப்பட்டன. அந்தக் குழந்தைக்கு பல நாட்கள் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், குழந்தையின் உடல்நிலை மோசமானதாலும் வியட்னாமின் மருத்துவமனை களில் சிகிச்சைக்குப் போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும் குழந்தையின் ஆயுட்காலம் ஓராண் டிற்கும் குறைவாக இருப்பதாகக் கூறி உள்ளூர் மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

குழந்தையைப் பெற்றவர்கள் அடையாளம் காணப்படாத நிலை யில், பௌத்த மடாலயத்தைச் சேர்ந்த மின் தாய் என்பவர் அதைத் தத்தெடுத்தார். அந்தக் குழந்தைக்கு ஹுவாய் ஆன் என பெயர் சூட்டப்பட்டது.

வியட்னாம் முழுவதும் ஒரு சில நாட்களிலேயே மக்களிடம் இருந்து கிட்டத்தட்ட $25,000 நிதி திரட்டப்பட்டது. அதைக் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் மூலம் கூடுதல் சிகிச்சைக்காக சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு குழந்தையை மின் தாய் கொண்டு வந்தார்.

குழந்தையின் முதல் எட்டு நாள் சிகிச்சைக்கு அந்த நிதி போதுமானதாக இருந்தாலும் அடுத்தகட்ட சிகிச்சைக்காக $10,000 திரட்டப்பட்டது.

தற்போது குழந்தை உடல்நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் கூறினர். இருப்பினும் அது இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மூளைநீர்கோவை பிரச்சினை (hydrocephalus) இருப்பதாக மருத்துவர்கள் சந்தே கிக்கின்றனர்.

ஒரு மாத காலமாக உயிருக்குப் போராடிவரும் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் மனோபலத்தை மருத்துவர்கள் பாராட்டினர்.

குழந்தை உடல்நலம் தேற மக்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கூறி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.