தேசிய பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளில்  26 பாலியல் புகார்கள்

கடந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) ஒழுங்குமுறைக் குழு விடம் பாலியல் குற்றங்கள் தொடர் பான 26 சம்பவங்கள் குறித்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் மாணவர்கள் சிலர் வெளி யிட்ட அறிக்கை ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

குட்டைப் பாவாடை அணியும் மாணவிகளையும் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் குளிப்பதையும் ஆபாசமான முறையில் காணொளி எடுப்பது உள்ளிட்ட 18 சம்பவங்கள் அவற்றில் அடங்கும். மாணவி களை மானபங்கப்படுத்திய ஐந்து சம்பவங்கள் குறித்தும் புகார் அளிக்கப்பட்டது.

புகார் அளிக்கப்பட்ட எஞ்சிய மூன்று சம்பவங்கள், குறுஞ் செய்தி அல்லது தொலைபேசி அழைப்பு வழியாக பாலியல் தொந் தரவு தருவது, ஆபாசமான நடத் தையில் ஈடுபடுவது தொடர்பா னவை.

மேற்கண்டவற்றைத் தவிர்த்து, மாணவர் தங்கும் விடுதிகளுக்குள் அத்துமீறி நுழைவது, மாணவி களின் உள்ளாடைகளைத் திருடு வது தொடர்பில் மூன்று புகார்கள் அளிக்கப்பட்டன.

பலமுறை பாலியல் முறைகேடு சம்பவங்களில் ஈடுபட்டாலும் இது வரை எந்தவொரு மாணவரும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளி யேற்றப்பட்டதில்லை.

பாலியல் முறைகேடு சம்ப வங்கள் எவ்வாறு கையாளப்படு கின்றன என்பது பற்றி கடந்த திங்கள்கிழமை என்யுஎஸ் விளக்க மளித்தது. அதன்படி, பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண் டாவது முறை குற்றம் நிரூபண மானால் சம்பந்தப்பட்ட மாணவர் பல்கலைக்கழகத்திலிருந்து வெளி யேற்றப்படுவார் எனத் தெரிவிக் கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள், மாணவர்களின் குறைகூறலுக்கு இலக்கான இந்தக் கொள்கையைத் தான் மறுஆய்வு செய்யவிருப்பதாக என்யுஎஸ் கூறியுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் தொடர்பு மற்றும் புதிய ஊடகத் துறையில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவி மோனிகா பே கடந்த நவம்பர் மாதம் யூசோஃப் ஹால் மாணவர் தங்கும் விடுதியில் குளிப்பதை இன்னொரு மாணவன் காணொளி எடுத்த சம்பவம் பெரும் புயலாக வெடித்ததை அடுத்து இந்த விவகாரம் வெளிச் சத்திற்கு வந்தது. 

அவ்வாறு காணொளி எடுத்த மாணவர் மீது பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் மனுவில் கிட்டத்தட்ட 30,000 பேர் கையெ ழுத்திட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு தவணை இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தங்கும் விடுதிக்குள் நுழைய அவருக்குத் தடை விதிக் கப்பட்டுள்ளது. அத்துடன், பாதிக் கப்பட்ட மாணிவி மோனிகாவிற்கு மன்னிப்புக் கடிதம் எழுதவும் கட்டாய ஆலோசனைக்குச் செல்ல வும் மாணவனுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon