ஸெங்குவா தொடக்கப்பள்ளியில் 230 பேர் இரைப்பை குடல் அழற்சியால் (gastroenteritis) பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது. புதன்கிழமை மாலை 5 மணிக்குக் கிடைத்த தகவலின்படி, இரைப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் வீடு திரும்பியதாகவும் கல்வி அமைச்சும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தன. இந்தச் சம்பவத்தை விசாரித்து வருவதாக அவை கூறின. இதன் தொடர்பில் பள்ளியின் உள்ள உணவகத்தில் அந்த இரண்டு அமைப்புகள் கடந்த வாரம் கூட்டுச் சோதனையை நடத்தின.
உணவுப்பொருட்களைக் கையாளும் 16 பேர், மருத்துவ சோதனைக்கு அனுப்பப்பட்டனர். உணவு மற்றும் சுற்றுச்சூழல் மாதிரிகள் ஆய்வுக்காகச் சேகரிக்கப்பட்டன.

