போதைப் பொருள் உட்கொண்ட தற்காகவும் அவற்றை வைத்திருந் ததற்காகவும் 'மெட்ரோ' குடும்பத்தின் வாரிசான ஓங் ஜென்னுக்கு (படம்) நேற்று 26 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மெட்ரோ நிறுவனத்தைத் தோற்றுவித்த ஓங் ஜோ கிம்மின் பேரப்பிள்ளையும் அக்குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜோப்பி ஓங்கின் மகனுமான 43 வயது ஓங் ஜென், கஞ்சாவைப் புழங்கிய ஒரு குற்றத்தையும் போதைப் பொருளை வைத்திருந்த இரண்டு குற்றங்களையும் ஒப்புக் கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ஓங் சிறையிலி ருந்து விடுதலை ஆகி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டி ருக்க வேண்டும். ஆனால், அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் அவரது தண்டனையை அதிகரிக்க சமர்ப்பித்த மேல்முறை யீடு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஓங்கின் தண்டனை இரண்டு ஆண்டிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அதிகரித் தது என்பது குறிப்பிடத்தக்கது.

