23 நாய்க்­குட்டி­களைக்­ கடத்திய­வர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்

மலேசியாவிலிருந்து 23 நாய்க்­குட்டி­களை 2016ஆம் ஆண்­டில் சிங்கப்பூருக்­குள் கடத்தி வந்த ஆட­வர் தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார். விலங்கு மற்­றும் பறவைகள் சட்­டத்­தின் அடிப்படை­யில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்­படும்.

சிங்கப்பூர­ரான 53 வயது சியாவ் யொன் சியோங், கள்­ளத்தனமாக அந்த நாய்க்­குட்டி­களைக்­ கடத்தி வந்­தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு போதிய இடவசதி அளிக்காமல் கொண்டு வந்ததால், தேவை­யில்லாத வலியை­யும் கொடுமை யையும் புரிந்­தார் என்­றும் குற்றச்சாட்டு கூறுகிறது. மேலும் போதைப்­ பொருள் உட்கொண்­டிருந்­ததை­யும் சியாவ் ஒப்­புக்­ கொண்­டார்.

2016, அக்டோபர் 28ஆம் தேதி­யன்று தனது படகில் பெரிய துணி­க­ளுக்கு அடி­யில் கூண்டு­க­ளில் அடை­க்­கப் பட்ட நாய்க்­குட்டி­களை போலிஸ் கடலோரக்­ காவல் படை யினர் கண்டுபிடித்­தனர் (படம்). அவற்­றில் 10 நாய்க்­ குட்டிகள் பின்­னர் மாண்டன. 

அடுத்த மாதம் சியாவுக்­குத்­ தண்டனை விதி­க்­கப்­படும். குற்­றத்­தின் கடுமை­யைப் பொறுத்து அ­வருக்கு $10,000 வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை அல்லது இரண்­டும் விதி­க்­கப்படலாம். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon