பெய்ஜிங் கருத்தரங்கில் பங்கேற்க பிரதமர் லீ சீனாவுக்­குப்­ பயணம்

பெய்ஜிங் கருத்தரங்கில் பங்கேற்க பிரதமர் லீ சீனாவுக்­குப்­ பயணம்

2 mins read

இரண்­டாவது பெரும் வர்த்தகப்­ பாதைத்­ திட்டம் தொடர் பிலான கருத்தரங்கில் பங்கேற்க பிரதமர் லீ சியன் லூங், ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங் சென்று சேர்ந்­தார்.

முதல் முறையாக இந்தக்­ கருத்தரங்கில் கலந்­து­கொள் ளும் திரு லீ, இன்று உயர்மட்­டத் தலை­வர்கள் முன்னிலை யில் உரை நிகழ்த்­து­வார். நாளை அவர், சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைமையேற்­கும் தலை­வர்கள் வட்டமேசை கூட்­டத் திலும் பேசு­வார் என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரி வித்­தது.

அதிபர் ஸி உருவாக்­கிய இந்தப்­ பெரும் வர்த்தகப்­ பாதைத்­ திட்டம், அக்கா­லத்துக்கு ­வர்த்தகப்­ பாதையை­யும் கடல் வர்த்தகப்­ பாதையை­யும் மீண்­டும் உயிர்ப்­பிப்பது­டன், சீனா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசியா­வின் இதர பகுதிகள் ஆகியவற்­றின் துறைமுகங்கள், சாலைகள் ரயில் பாதைகள், தொழிலியல் மையங்கள் போன்றவை மூலம் இணைப்­பதை மையமாகக்­ கொண்­டி­ருக்­கும்.

2017ம் ஆண்­டில் நடந்த முதலாவது கருத்தரங்கில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் பங்கேற்­றார். இப்­போது பிரதமர் லீ உட்­பட கிட்­டத்தட்ட 40 நாடுக­ளின் தலை­வர்­க­ளும் கருத்தரங்கில் பங்கேற்­கின்ற­னர். அவர் க­ளில் இதர ஒன்பது ஆசி­யான் தலை­வர்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்­டின், ஆஸ்திரியப்­ பிரதமர் செபாஸ்டி­யன் குர்ஸ் ஆகியோ­ரும் பங்கேற்­கின்ற­னர்.

இந்த உச்சநிலைக்­ கூட்­டத்­தில் பிரதமர் லீ, இதர நாட்டுத்­ தலை­வர்­க­ளு­டன் இருதரப்­புப்­ பேச்­சு­களை நடத்து வார். இருதரப்பு ஒத்­துழைப்பை வலுப்­படுத்த பல்வேறு உடன்பாடுகள் இந்த வருகை­யின்போது கையெழுத்­திடப்­ படும்.

பிரதமரு­டன் திருமதி லீ, வெளியுறவு அமைச்சர் விவி­யன் பாலகிருஷ்­ணன், வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், சுற்றுப்­புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், துணை அமைச்சர் ஸாக்கி மு­கம்மது, மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோரு­டன் சென்றுள்­ளனர். பிரதமர் நாடு திரும்­பும் வரை துணைப்­ பிரதமர் தர்­மன் சண்முக­ரத்னம் தற்காலிகப்­ பிரதமராகச்­ செயல்­படு­வார்.