எதிர்காலத் தலைமுறையினருக் குப் பொருந்தும் வகையில் 'மேல் நோக்கி', 'கீழ்நோக்கி', 'கடல் நோக்கி' என மூன்று திசைகளில் சிங்கப்பூர் திட்டமிடுகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 'இமேஜின் 2060' கருத்தரங்கில் பேசிய திரு வோங், 'மேல்நோக்கி' அம்சத்தில் சிங்கப்பூர் உயர்மாடிக் கட்டடத் தில் வசிக்கும் பழக்கத்துக்கு வந் திருந்தாலும் இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லலாம் என்று கோடி காட்டினார்.
அதற்கு பாய லேபார் பகுதியை உதாரணமாகக் காட்டிய அமைச் சர், பீஷானின் நிலப்பரப்பான 800 ஹெக்டர் நிலத்தைக் கொண்டு உள்ள இடத்தில் உள்ள பாய லேபார் விமானத்தளம் 2030ஆம் ஆண்டில் மற்றோர் இடத்துக்கு மாறும்போது, அந்த இடத்தில் உயர்மாடிக் கட்டடங்களும் தொழிற்பேட்டைகளும் உருவாக் கப்படலாம் என்றார்.
மேல்நோக்கி செல்லுதலுக்காக அவர் செங்குத்தான பண்ணை பற்றியும் சூரியசக்தி தகடு பற் றியும் பேசினார். அடுத்த ஆண் டுக்குள் 500,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப் படும் என்றும் கூறினார்.

