'முன்னிலை அதிகாரி­க­ளுக்கு கூடுதல் அதிகாரம் தருக'

'முன்னிலை அதிகாரி­க­ளுக்கு கூடுதல் அதிகாரம் தருக'

2 mins read
08cd9505-059a-4e9d-a268-324dedb4ae68
வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் ST PHOTO: KELVIN CHNG -

அவசரநிலைச்­ சூழ­லில் மேலதி காரியிடமிருந்து அனுமதி கிடைக்­கும் வரை காத்­திருக்காமல் உடனடியாக முடி­வெடுக்­கும் அதி காரத்தை பொ­புப்துறை முன் னிலை அதிகாரி­க­ளுக்கு வழங்க வேண்­டும் என்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்­துள்­ளார்.

அவசர முடி­வெடுக்­கும்போது, பொதுவாக ஓர் அமைச்­சின் தலை மைய­கத்­தில் இருக்­கும் ஒருவ­ரின் மதிப்பீட்டுக்­குப்­ பிறகு எடுக்­கும் முடி­வைக்­ காட்டி­லும் சம்பவம் நடக்­கும் இடத்­தில் உள்ள முன் னிலை அதிகாரிகள் உடனடியாக முடிவெ டுக்­கும் சிறந்த நிலை­யில் இருப்­பார்கள்," என்று நேற்று நடை பெற்ற பொ­புப்துறை உள் தணிக்கை மாநாட்­டில் திரு சீ உரையாற்றியபோது இவ்­வாறு கூறி­னார்.

தலைமைத்­ தணிக்கை அதிகாரி கோ சூன் போ, தலை மைக்­ கணக்காளர் அவ் ஃபூக்­ சிவென் உட்­பட பொ­புப்துறை­யைச் சேர்ந்த 300 உள்தணிக்கையாளர் கள் இந்த வருடாந்திர நிகழ்­வில் பங்கேற்­றனர். இதற்கு சிங்கப்பூர் உள்தணிக்கையாளர்கள் கழ­கம் ஏற்பாடு செய்திருந்­தது.

அமைப்­புக்­குள் ஏற்­படும் அபா யங்­களைச்­ சமாளித்து, விதிமுறை களை­யும் நடைமுறை­களை­யும் மறுஆய்வு செய்­யும் தற்போதைய செயல்பாடு­களைத்­ தாண்டி, உள் தணிக்கையாளர்கள் இத்தகைய புத்­தாக்­கத்துக்­கும் பரிசோதனை க­ளுக்­கும் ஊக்­கத்தைக்­ கொடுக்க வேண்­டும் என்­றும் அமைச்சர் சொன்­னார்.

"அதிகாரி ஒரு­வர் நல்ல எண் ணத்து­டன் நடைமுறை விதி­களைப்­ பின்பற்றாமல் ஒரு புதிய யோசனை யைச் செய்து பார்க்­கும்போது, அவருக்கு எதிராக நாம் நடவ டிக்கை எடுப்­போமா அல்லது அந் தச்­ செயலை மதிப்­பிட்டு, அது தற் போதைய நடைமுறையைவிட சிறப்­ பானதாக இருந்தால், அதை நீக்­ குப்­போக்­கு­டன் ஏற்றுக்­கொள் வோமா, "என்று திரு சீ கேள்வி எழுப்­பி­னார்.

"இதற்கு எளி­தான ஒரு பதில் இல்லை. ஆனால், முன்னிலை அதிகாரிகள் நிலைமைக்­குத்­ தகுந்த நல்ல முடிவை எடுக்க அர சாங்­கம் ஆதரவளிக்­கும்.

"தானாக முடி­வெடுத்­தால் தவ றுகள் நிகழக்கூ­டும் என்ற அச்­சத் தில் எதுவுமே செய்யாமல் இருப்ப தைக்­ காட்டி­லும் பொ­புப்துறை அதிகாரிகள் தைரியமாக முடிவெ டுக்­கும் மனப்­போக்கைப்­ பெற வேண்­டும்," என்­றும் அமைச்சர் விவரித்­தார்.