சிங்கப்பூரில் குறைந்த எண்ணிக் கையிலான லஞ்ச ஊழல் சம்பவங் கள் நடந்திருப்பதாகவும் இதன் தொடர்பில் செய்யப்பட்ட ஆய்வில் உலகநாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றம் நேற்று வெளி யிட்ட தகவல்கள் கூறின.
ஃபின்லாந்து, சுவீடன், சுவிட்சர் லாந்து ஆகிய நாடுகளுடன் சிங் கப்பூரும் பட்டியலில் மூன்றாவது நிலையில் இடம்பெற்றது. 2018ஆம் ஆண்டுக்குரிய லஞ்ச ஊழல் கருத்துக் குறியீட்டுப் பட்டியலில் 180 நாடுகள் இடம்பெற்றிருந்தன. பட்டியலின் முதல் இடத்தில் டென்மார்க்கும் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தும் இடம் பெற்றன. பட்டியலின் முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசிய நாடாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது.
சிங்கப்பூரில் லஞ்ச ஊழல் தொடர்பான சம்பவங்கள் குறை வாக இருப்பதால் நிலைமை கட் டுக்குள் உள்ளதாக மன்றம் நேற்று அதன் 2018ஆம் ஆண்டு புள்ளி விவரங்களைச் சுட்டிக் கூறியது.
சென்ற ஆண்டு லஞ்ச ஊழல் தொடர்பில் 358 புகார்களைப் பெற்றதாகவும் இவற்றில் 107 புகார்கள் விசாரணைக்குப் பதி வாகியுள்ளதாகவும் கூறப்பட்டது. போதுமான ஆதாரமும் நம்பகமான தகவலும் உள்ள நிலையில் மட் டுமே விசாரணை மேற்கொள்ளப் படும்.
மன்றம் விசாரணை செய்த குற்றங்களுக்காக மொத்தம் 112 பேர் சென்ற ஆண்டு குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் 107 பேர் தனியார் பிரிவைச் சேர்ந்தவர் கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

