'கொய்' மீன்களை வளர்ப்பதற் காகத் தனது வீட்டு வாசற்படிக் கட்டுகள் அமைந்திருக்கும் இடத்தை மீன் தொட்டியாக மாற் றிய வீட்டு உரிமையாளர் அத்தொட்டியை அகற்றிவிட்டார். தொட்டியை அப்படியே வைத்திருக்க அவர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் (வீவக) செய்திருந்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு செய்துள்ளார். கிட்டத்தட்ட பத்து மீன்களை வளர்ப்பதற்காக திரு டான் என்ற அந்த ஆடவர், தெம்பனிஸ் ஸ்திரீட் 41லுள்ள தனது வீட்டு வாசலுக்கு வெளியே படிக்கட்டு களில் நான்கு பக்கங்களிலும் கண்ணாடிச் சட்டங்களைப் பொருத்தி அந்த இடத்தை ஒரு பெரிய மீன் தொட்டியாக மாற்றி இருந்தார்.
வீட்டு வாசல் படிக்கட்டுகளை 'கொய்' மீன் தொட்டியாக மாற்றிய குடியிருப்பாளர் அதைத் தொடர்ந்து வைத்துக்கொள்ள செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அது அகற்றப்பட்டுவிட்டது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

