சாலை­க­ளில் வரும் ஆண்­டில் மூன்று கதவு பேருந்­து­கள்

சாலை­க­ளில் வரும் ஆண்­டில் மூன்று கதவு பேருந்­து­கள்

2 mins read
a2fc9c3c-f97c-4b66-af5e-90a47f61aec3
மூன்று கதவுகள் கொண்ட ஈரடுக்­குப்­ பேருந்­து­கள் அடுத்த ஆண்டுமுதல் பொதுப்­ போக்­குவ­ரத்துக்­குப்­ பயன்­படுத்தப்­படும். படம்: வான்பாவ் -

கிட்­டத்தட்ட 64 மில்லி­யன் வெள்ளி செல­வில் நிலப்­ போக்­ குவ­ரத்து ஆணையம் மூன்று கதவுகள் கொண்ட ஈரடுக்­குப்­ பேருந்­து­­களை வாங்கவுள்­ளது. இவை அடுத்த ஆண்டு சாலை க­ளில் வலம் வரவுள்­ளன.

மொத்தம் 100 'யூரோ 6 டீசல்' வகை பேருந்­து­கள் இத்­திட் டத்­தின்கீழ் வாங்கப்படவிருக்­கின் றன.

ஆணையம் இவ்­வகை பேருந்து களை ஏற்கனவே சோதனை­யில் ஈடு­படுத்­தியது. 2017ஆம் ஆண்டு மார்ச்­ முதல் செப்டம்பர் மாதம் வரை 'டவர் டிரான்சிட்' போக்­குவ­ரத்து நிறுவனம், அதன் 143 பேருந்­து­ச்­ சேவைக்காக மூன்று கதவு பேருந்தைப்­ பயன் படுத்­தியது. அதே ஆண்­டின் ஜூன் முதல் 2018ஆம் ஆண்டு ஜனவரி வரை 'எஸ்எம்ஆர்டி' நிறு வனம் 190, 901 ஆகிய பேருந்­து­ச்­ சேவை­க­ளுக்கு இவ்­வகை பேருந் தைப்­ பயன்­படுத்­தியது.

மூன்றாவது கதவு இருப்பதால் பேருந்­து­­க­ளில் மேலும் விரை வாக­வும் சுமுகமாக­வும் ஏறி­ இறங்க முடிந்ததாகப்­ பொதும­க்­கள் கூறியதாக­வும் இவ்­வகை பேருந்து இருப்­பதை வரவேற்றதாக­வும் ஆணையம் கூறியது.

முன்னோட்டச்­ சோதனை முடி­வுகள் திருப்திகரமாக இருந் ததால் சென்ற ஆண்டு மே மாதத் தின்போது இவ்­வ­கை­யான 100 பேருந்­து­­களை வாங்குவதற்­கான ஒப்பந்தப்­புள்ளியை ஆணையம் கோரியது.

நூறு பேருந்­து­­க­ளில் பாதி எண்ணிக்கை அலெக்சாண்டர் டென்­னில் (சிங்கப்பூர்) நிறுவ­னத் திடமிருந்­தும் மீதி 'எஸ்டி என்ஜினியரிங் லேண்ட் சிஸ்டம்ஸ்' நிறுவ­னத்திடமிருந்­தும் பெறப்­படும்.

இவ்­வகை பேருந்­து­­களை வாங் குவதற்­கான ஆகப்­ பெரிய கொள் முதல் நடைபெறுவது இதுவே முதல் முறை. தற்போது ஆணை­யத் தின் பேருந்து வழங்குநர்­க­ளாக­வும் இவ்­வ­ிரு நிறுவனங்கள் இருந்து வரு­கின்றன.

புதிய பேருந்­து­கள் சிங்கப்பூருக்­ குக் கட்டங்கட்டமாகக்­ கொண்டு வரப்­படும் என்­றும் அடுத்த ஆண்டு சாலைப்­ பய­ணத்­திற்குப்­ பயன்­படுத்தப்­படும் என்­றும் கூறப்­ படுகிறது.