'தவறுதான்': காணொளி எடுத்த மாணவன்

'தவறுதான்': காணொளி எடுத்த மாணவன்

1 mins read
36342dc7-f7bf-41fd-b596-a6b374b184fd
-

தேசிய பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் மாணவி மோனிக்கா பேயைக் காணொளி எடுத்த இளநிலைப் பட்டக்கல்வி மாணவர் நிக்கலஸ் லிம், அதனைப் பற்றி தனது காதலியிடம் தெரிவித்தார். இருவரும் குமாரி பேயை நேரடியாகச் சந்தித்ததாகவும், அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் 23 வயது லிம் சொன்னார்.

"இதனைச் செய்தது நான் என்று ஒப்புக்கொள்ள விரும்பினேன்," என்று லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அளித்த பேட்டியின்போது கூறினார். "தவறு செய்தேன். ஓடி ஒளிய நான் திட்டமிடவில்லை," என்றார் ரசாயனப் பொறியியல் பயிலும் அந்த மாணவன்.

கடந்த வியாழக்கிழமை அந்தச் சம்பவம் குறித்து குமாரி பே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். லிம்முக்குப் பல்கலைக்கழகம் விதித்த தண்டனை கடுமையாக இல்லை என்று குமாரி பே தனது இன்ஸ்டகிராம் பதிவில் எழுதியிருந்தார். அப்போதுதான் இந்தச் சம்பவம் குறித்து தமது பெற்றோரிடம் கூறியதாக லிம் தெரிவித்தார்.

லிம்மின் பாட்டி திங்கட்கிழமை (ஏப்ரல் 22) இறந்த அதே சமயத்தில் இந்த விவகாரம் ஊடகங்களில் சூடுபிடித்துக்கொண்டிருந்தது. பாட்டியின் மறைவால் துக்கப்படும் தனது பெற்றோருக்கு இது மற்றோர் இடியாக விழுந்ததை நினைத்து பெரும் வேதனை அடைவதாக லிம் கூறினார்.

சம்பவத்தின் போது தன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது எனத் தெரியவில்லை என்றார் அந்த இளையர்.

இது குறித்து லிம்மும் குமாரி பேயும் பேசியது பற்றி மேலும் தெரிந்துகொள்ள வாசகர்கள் நாளைய தமிழ் முரசு இதழைப் படிக்கலாம்...