‘கம்ஃபர்ட் டெல்குரோ’ நிர்வாக சபையில் புதிதாக மாதர் மூவர்

'கம்ஃபர்ட் டெல்குரோ' குழுமம், புதிதாக மாதர் மூவரைத் தனது நிர்வாக சபையில் சேர்த்துள்ளது. அதன் நிர்வாக சபை உறுப்பினர்களில் இப்போது 30 விழுக்காட்டினர் பெண்களாக உள்ளனர். திருவாட்டி ஜெசிக்க சியாம், திருவாட்டி சுவா மூய் ஹூன், திருவாட்டி டான் போ ஹோங் ஆகியோர் புதிதாக நிர்வாக சபையில் சேர்ந்துள்ளனர்.

சுற்றுப்புற நிலைத்தன்மை, அரசாங்கம் மற்றும் ஊடகத் தொடர்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் பன்முகத்திறன்களை இம்மூவர் நிர்வாக சபைக்குக் கொண்டுவருவதாக 'கம்ஃபர்ட் டெல்குரோ' தெரிவித்துள்ளது.

திருவாட்டி சியாம், இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி சபையில் இணைந்தார். சுற்றுப்புற நிலைத்தன்மையைப் பற்றிய 'இக்கோ பிசினஸ்' சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியராக 36 வயது திருவாட்டி சியாம் பணியாற்றுகிறார். வாழத்தக்க, நிலைத்தன்மை வாய்ந்த நகரங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து அவற்றைப் பகிர்வதை நோக்கமாகக் கொண்டுள்ள 'செண்டர் ஃபோர் லிவபல் சிட்டிஸ்' நிலையத்தில் அவர் பகுதிநேர இணை ஆய்வாளராகவும் பணியாற்றுகிறார்.

49 வயது திருவாட்டி சுவா, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழில் கட்டுரைப் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஏப்ரல் 26ஆம் அவர் தேதி எஸ்பிஎஸ் டிரான்சிட் நிர்வாக சபையில் சேர்ந்தார். வைகாம் நிறுவனத்தின் நிர்வாக சபையில் இணைந்த 60 வயது திருவாட்டி டான், 2009ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!