விபத்தில் காயமடைந்த ஈ-ஸ்கூட்டர் ஓட்டுநர் மரணம்

விபத்தில் காயமடைந்த ஈ-ஸ்கூட்டர் ஓட்டுநர் மரணம்

1 mins read
f8e7c010-ac10-4885-9d70-a2166524f71b
-

பேருந்து ஒன்றுடன் மோதிய ஈ-ஸ்கூட்டரின் பெண் ஓட்டுநர் படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டார். உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சுயநினைவு இழந்த நிலையில் அந்த 39 வயது பெண், கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் பின்னர் அவர் அங்கு மாண்டதாகவும் போலிசார் கூறினர். விபத்தில் சம்பந்தப்பட்ட 60 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணைக்கு ஒத்துழைத்து வருதாகக் கூறப்படுகிறது.