பிராடல் மேம்பாலத்துக் குக்கீழ் நேற்றுக் காலை 68 வயது முதியவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது (படம்). மத்திய விரைவுச் சாலைக்கு இட்டுச் செல்லும் துணைச் சாலைக்கு அருகில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் உடல் ஒன்று கிடக்கிறது என்று போலிசுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் முதியவரின் மரணத்தை உறுதிப்படுத்தினர். இந்த இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பில் போலிஸ் விசாரணையைத் தொடங்கி உள்ளது. இந்த மரணத்தில் சூது இருப்பதாக சந்தேகிக்கப்பட வில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
பிராடல் மேம்பாலத்துக்குக் கீழ் முதிய ஆடவரின் சடலம் கண்டுபிடிப்பு
1 mins read

