வரும் அக்டோபர் மாதம் முதல் சிங்கப்பூரிலிருந்து மலேசியா வுக்குள் செல்லும் அனைத்து வாகனங்களும் வாகன நுழைவு அனுமதிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரிலிருந்து கடற்பாலம், துவாஸ் இரண்டாம் இணைப்பு மூலம் ஜோகூருக்குச் செல்லுதல், மலேசியா-தாய்லாந்து எல்லை, மலேசியா-புருணை மற்றும் மலேசியா-இந்தோனீசியா எல்லை ஆகிய மூன்று கட்டங்களாக இது அமல்படுத்தப்படும். மற்ற இரண்டு எல்லைகளில் வாகன நுழைவு அனுமதிக் கட்டணம் வசூலித்தல் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று மலேசிய அரசாங்கம் தெரிவிக்கவில்லை.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான நுழைவு அனுமதி ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கான நுழைவு அனுமதி வில்லையை ஜோகூர் பாருவில் உள்ள தெற்கு நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையின் கெலாங் பாத்தா ஓய்விடம், பிளாசா அங்சானா கடைத்தொகுதி கார் திறந்த வெளி நிறுத்துமிடம், பாண்டான் லூப் ஓய்விடம், லிமா கெடாய் சாலை வரிக்கூடம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
வாகன நுழைவு அனுமதி வில்லைக்கு விண்ணப்பிக்க https://vep.jpj.gov.my எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம். வாகனம் பதிவு செய்யப்பட்டவுடன் அதன் வில் லையைப் பெற்றுக்கொள்ள அழைக்கும் மின்னஞ்சல் வாகன உரிமையாளர்களுக்கு அனுப்பப்படும். அக்டோபருக்குப் பிறகு வாகன நுழைவு அனுமதி பெற்ற வாகனங்கள் மட் டுமே மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

