தெம்பனிஸ் புளோக்­கில் அனுப்பப்படாத கடிதங்கள் கண்­டெடுப்­பு

தெம்பனிஸ் புளோக்­கில் அனுப்பப்படாத கடிதங்கள் கண்­டெடுப்­பு

1 mins read

தெம்பனிஸ் ஸ்திரீட் 83, புளோக்­ 862A­யில் உள்ள அஞ்சல் பெட்டி­க­ளுக்கு அருகில் இன்­னும் அஞ்சல் பெட்டி­க­ளில் போடப்படாத இரு கடித­க்­கட்டுகள் கண்­டெடு­க்­கப்பட்டுள் ளன (படம்) என்று தெரிவித்­துள்ள சிங்போஸ்ட் நிறுவனம் அதன் தொடர்­பில் விசாரணை­யைத் தொடங்கியுள்ளதாக­வும் கூறியது.

இது குறித்து தனது ஃபேஸ்புக்­கில் பதிவேற்றம் செய்த ஜோன் லி, அஞ்சல்பெட்டி­க­ளுக்கு அருகில் உள்ள வேண் டாத விளம்ப­ரத்தாட்­களைப்­ போடும் பெட்டிக்­குள் சில கடிதங்­களை­யும் பொட்டலங்­களை­யும் கண்டதாகக்­ கூறி­னார். அந்த இரு கடித­க்­கட்டு­களைத்­ தன்னிடமிருந்து பெற்றுக்­கொள்ளுமாறு அவர் சிங்போஸ்டுக்கு தகவல் கொடுத்­தார்.

"இவ்­வாறு நடந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட தவறுகள் நடந்திருக்கக்கூடாது. தீய நோக்­கம் உள்ள­வர்கள் இந்தக்­ கடிதங்­க­ளில் உள்ள முகவரி­களைப்­ பயன்­படுத்தி தவ­றான செயல்­க­ளில் ஈடுபடக்­ கூடும்," என்­றும் திருவாட்டி லி அக்கறை தெரிவித்­தார்.