பொருளியல் வளர்ச்சி சற்று மெது வடைந்தாலும் முதல் மூன்று மாதங்களில் தொழிலாளர் சந்தை நிலையாக இருந்தது. மொத்த வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், ஒட்டு மொத்த வேலையின்மை விகிதம் 2.2% என்ற நிலையிலேயே இருந்து வந்துள்ளது என்று மனித வள அமைச்சின் ஆரம்பக்கட்ட தக வல்கள் தெரிவிக்கின்றன.
முன்னைய காலாண்டுடன் ஒப்புநோக்க ஆட்குறைப்பு விகித மும் இவ்வாண்டு முதல் காலாண் டிலும் கிட்டத்தட்ட அதே விகிதத் தில் இருந்தது.
இவ்வாண்டு முதல் காலாண்
டில் ஆட்குறைப்பு எண்ணிக்கை 2,500. முன்னைய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,510. கடந்த ஆண்டில் முதல் காலாண்டு எண் ணிக்கை 2,320 என்றும் இது ஐந்து ஆண்டுகளில் ஆகக் குறைவு என்றும் அறிக்கையில் கூறப்பட்டது.
கடந்த மாதத்தில் சிங்கப்பூரர் களுக்கான வேலையின்மை விகி தம் 3.2% ஆக இருந்தது. டிசம்பர் மாதத்தில் அது 3.1% ஆக இருந் தது. சிங்கப்பூரர்களையும் நிரந்தர வாசிகளையும் உள்ளடக்கிய குடி யிருப்பாளர்களின் வேலையின்மை விகிதம் மாறாமல் 3 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைந்து முதல் காலாண்டில் 1.3 விழுக்காடானது.
பொருளியல் ஏற்ற இறக்கத்தை ஒட்டியே தொழிலாளர் சந்தை இருக்கும்.
ஆனால், இவ்வாண்டு முதல் காலாண்டில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர்த்து 12,000 ஆக இருந்தது.
கடந்த ஆண்டின் கடைசி காலாண்டு எண்ணிக்கையான 14,700ஐவிட இது குறைவுதான் என்றாலும் இந்த அதிகரிப்பு விழாக்காலத்துக்காகத் தற்காலிக மாக வேலைக்கு அமர்த்தப்பட்ட
தால் ஏற்பட்டது என்பதையும் அமைச்சு சுட்டியது.

