'இருநாட்டு நல்லுறவைக்­ கட்டிக்காக்க வேண்­டும்'

'இருநாட்டு நல்லுறவைக்­ கட்டிக்காக்க வேண்­டும்'

2 mins read

சிங்கப்பூ­ருக்­கும் மலேசியாவுக்­கும் அவ்­வ­ப்­போது சர்ச்சைக்­குரிய விவகாரங்கள் தோன்றினா­லும் அவற்றுக்­குச்­ சுமூகமா­கத் தீர்வு காண முய­லும் அதேவேளை­யில் இரு நாடு­க­ளும் தங்­க­ளுக்­கிடை யிலான நல்லுறவைக்­ கட்டிக்காக்க வேண்­டும் என்று மலேசியா­வின் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அன்­வார் இப்ராஹிம் தெரிவித்­துள் ளார்.

"மலேசியா­வின் சிறந்த அண்டை நாடாக­வும் சிறந்த நட்பு நாடாக­வும் சிங்கப்பூர் கருதப்­படு கிறது. ஆனால் இரு நாடு­க­ளும் வெவ்­வ­ேறு வகை­யில் பரிணமித்­ துள்­ளன," என்று திரு அன்­வார் நேற்று நடைபெற்ற பசிபிக்­ நாடு க­ளுக்­கிடையி­லான வழக்கறிஞர் கூட்டம் மற்­றும் மாநாட்­டில் உரை யாற்றியபோது கூறி­னார்.

"சிங்கப்பூர் ஒரு கரடுமுர­டான சமூ­கத்தைக்­ கொண்ட நாடா­கத் தொடங்கினா­லும், பேச்­சு­வார்த்தை என்று வரும்போது கொஞ்சம் கடி னமான நாடாக மாறிவிட்டது," என்று கூறிய திரு அன்­வார் அதை மேலும் விவரிக்க­வில்லை.

ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மையத்­தில் நடைபெற்ற அதே மாநாட்­டில் இடம்பெற்ற கலந்­துரை யாட­லில் பங்கேற்ற திரு அன்­வார், "இரு அண்டை நாடு­க­ளும் பொது வான வரலாற்றைக்­ கொண்டுள் ளன. குடும்பப்­ பிணைப்­பு­க­ளும் ஒன்றை ஒன்று சார்ந்­து­ள்ளதால் இரண்­டும் இணைந்து நம்பிக்கை அடிப்படை­யில் பணியாற்றுவ­தன் மூலம் இரு நாடு­க­ளுக்­கும் அதிக நன்மை கிடைக்­கும்," என்று விளக்­கி­னார்.

"இது­தான் நாட்டுத்­ தலை­வர்க ளுக்­குள்ள உணர்வு. ஆசி­யான் நாடு­க­ளு­டன் சிறந்த உறவு கொண்­டிருப்பது முக்­கியம் என் றாலும் அதைவிட முக்­கியம் சிங் கப்பூருட­னான நல்லுறவு.

"முன்னைய அரசாங்­கத்­தின் தவ­றான நிர்வா­கத்­தின் விளைவாக மலேசியா­வின் தற்போதைய அர சாங்­கம் பொருளியல் பிரச்­சினை களை­யும் பல மாற்றங்­களை­யும் சந்­தித்து வருகிறது.

"அப்படி இருந்தா­லும் இரு நாடு­க­ளும் தங்கள் நல்லுறவை மேலும் மேம்­படுத்­திக்­கொள்ள புதிய வழி­களை ஆராய்வது முக்­ கியம்.

"இரு நாடு­க­ளுக்­கும் அவ்­வ­ப்­ போது சர்ச்சைக்­குரிய விவகாரங் கள் நிக­ழும்போது, அவற்றுக்கு ஆக்கபூர்வ­மான வழி­களைப்­ பயன் படுத்தி, மிகக்­ கவனமா­கத் தீர்வு காண்பது அதிமுக்­கியம்," என்­றும் திரு அன்­வார் வலியுறுத்­தி­னார்.

சி­றை­யிலிருந்து விடுதலை­யான பிறகு நீதிக்­கும் விடுதலைக்­கு

­மான தமது பேரார்வம் வலுவடைந் திருப்பதாகக்­ கூறிய திரு அன் வார், "எனக்­குத்­ தவறிழைத்த­வர் களை மன்னித்து விட்­டேன். முடிந்­து­போனதை நினைத்து ­வருத்தப்படப்­ போவ­தில்லை. எனது சொந்த விருப்பு வெறுப்பு ­களைக்­ காட்டி­லும் எனது நாட்­டின் முன்னேற்றமே எனக்கு முக்­கியம்," என்­றும் கருத்­துரைத்­தார்.

மலேசியா­வின் அடுத்த பிரதம ராகப்­ பொறுப்பேற்க அவர் எவ் வாறு தம்மைத்­ தயார்ப்­படுத்­திக்­ கொண்டு வருகி­றார் என்று கேட் கப்பட்டதற்கு, பிரதமர் பதவிக்­குத்­ தாம் அவசரப்பட­வில்லை என்­றும் பிரதமர் மகாதீர் மலேசியாவை முன்னேற்றப்­ பாதை­யில் கொண்டு செல்ல தம்மால் ஆன அனைத்து உதவி­களை­யும் வழங்குவதே இப்­ போதைக்­குத்­ தமது முன்னுரிமைக்­ கடமையாக உள்­ளது என்­றும் திரு அன்­வார் எடுத்­துரைத்­தார்.