ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்திலிருந்து கடந்த புதன்கிழமையன்று வெளியேற முற்பட்ட வாகன ஓட்டுநருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டி ருந்தது. கட்டணத் தொகையைக் காட்டும் திரையில் $3,158.72 என்று இருந்ததைப் பார்த்து 27 வயது திரு சுப்ரா திகைத்தார். ஜுவலில் உள்ள சரக்கு ஏற்றி இறக்கும் இடத்தில் அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மட்டும் இருந்ததாக அவர் தெரிவித்தார். திரு சுப்ராவின் வாகனம் முன்பு அங்கிருந்து வெளியான போது வாகன நிறுத்துமிடத்தின் சாதனம் அதைப் பதிவு செய்யாததே இந்தப் பிரச்சி னைக்குக் காரணம் என்று ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் செய்தித்தொடர் பாளர் கூறினார். ஜுவல் ஊழியரிடம் பேசிய பிறகு திரு சுப்ரா கட்டணம் ஏதும் செலுத்தாமல் 10லிருந்து 15 நிமிடங்கள் கழித்து வாகன நிறுத்துமிடத்தைவிட்டு வெளியேறினார்.
$3,158 கட்டணம்: ஓட்டுநர் அதிர்ச்சி
1 mins read
ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள சரக்கு ஏற்றி இறக்கும் இடத்தில் அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு இருந்ததாக ஓட்டுநர் தெரிவித்தார். படம்: சுப்ரா மேக் ஃபேஸ்புக் -

