சுடச் சுடச் செய்திகள்

லேக்சைட் கார்டன் திறப்பு: சிறாருக்கு 13 சாகச நிலையங்கள்

ஜூரோங் லேக் கார்டன்ஸின் மேற்குப் பகுதியான 53 ஹெக்டர் பரப்பளவு கொண்ட லேக்சைட் கார்டன் நேற்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
லேக்சைட் கார்டனில் ஜூரோங் லேக் கார்டன்ஸ் வெஸ்ட் அமைந் துள்ளது. 
இயற்கை, சமூகம், விளை யாட்டு ஆகியவற்றுக்கு முக்கியத் துவம் கொடுத்து புதிய தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக தேசிய பூங்கா கழகம் தெரிவித்துள்ளது.
புதிய லேக்சைட் கார்டன் தோட்டம் யுவான் சிங் சாலையில் லேக்சைட் எம்ஆர்டி நிலையத் துக்குப் பக்கத்தில் அமைந் துள்ளது.
லேக்சைட் கார்டனில் ஐந்திலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறாருக்காக ‘ஃபாரஸ்ட் ரம்பல்’ எனும் விளையாட்டுப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2.3 ஹெக்டர் பரப்பளவு கொண்ட விளையாட்டுப்  பகுதி  குடியிருப்புப் பேட்டையில் அமைக் கப்பட்டிருக்கும் ஆகப் பெரிய இயற்கை எழில்மிக்க விளை யாட்டுத் தோட்டமாகும். 
சிறாருக்காக அங்கு 13 வகை சாகச நிலையங்கள் உள்ளன. 
“இந்த வட்டாரத்தின் அமைதி யான சூழலைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடன் லேக்சைட் கார்டன் மிகக் கவனமாக அமைக்கப்பட்டது. அதே சமயத் தில் சமூக, பொழுதுபோக்கு அம்சங்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன,” என்று தேசிய பூங்கா கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூரோங் லேக் கார்டன்ஸின் இதர பகுதிகள் 2021லிருந்து படிப்படியாக திறக்கப்படும் என்று கழகம் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon