சுற்றுப்புறத் தூய்மை: பொதுமக்கள் ஊக்குவிப்பு

சுற்றுப்புறத் தூய்மை: பொதுமக்கள் ஊக்குவிப்பு

1 mins read
802259d0-39a1-4008-bd13-b5445000b3f2
பிடோக் நகர மையத்தில் நேற்று நடந்த 'கீப் கிளீன், சிங்கப்பூர்! 2019' அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்களது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்கப் பொதுமக்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சி அடுத்த மாதம் முதல் தொடங்கும்.

பொதுச் சுகாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 'நிலைத்து நிற்கும் வெளிச்சப் புள்ளிகள்' என்ற அந்தத் திட்டம் 12 தொகுதிகளில் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்று அறிவித்த மூன்று புதிய திட்டங்களில் இதுவும் ஒன்று.

"குடியிருப்பாளர்கள் தங்களது பேட்டைகளைத் தூய்மையாக வைத்திருப்பதை ஊக்குவிக்க 'நிலைத்து நிற்கும் வெளிச்சப் புள்ளிகள்' திட்டம் இலக்கு கொண்டுள்ளது," என்று அமைச் சர் மசகோஸ் தெரிவித்தார்.

"நம்மில் பெரும்பாலானோர் வீடமைப்புப் பேட்டைகள், சாலை கள், பொது நடைபாதைகள், நீர்வழிகள் ஆகியவற்றை நாள் தோறும் சுத்தப்படுத்த 58,000 துப்புரவுப் பணியாளர்களைச் சார்ந்திருக்கிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

குப்பைகளைக் கண்ட இடங் களில் கொட்டாமல், அவற்றுக் குரிய இடங்களில் போடும்படி மக்களை ஊக்குவிக்க பேட்டை களில் விழிப்புணர்வுப் பிரசாரங் களும் நடவடிக்கைகளும் இடம் பெறும். இத்திட்டத்தில் பங்கு கொள்ள, தீவு முழுவதும் 12 குடி யிருப்பாளர் கட்டமைப்புகள் கடப் பாடு கொண்டுள்ளன.