சுடச் சுடச் செய்திகள்

இல்லப் பணிப்பெண்களைக் கொண்டாடும் மே மாதம்

இல்லப் பணிப்பெண்களின் சேவைக்கு நன்றிகூறும் விதமாக வரும் மே மாதம் முழுவதும் அவர்களுக்கென பிரத்தியேக மாக பல்வேறு நடவடிக்கைகளுக் கும் சேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பணிப்பெண்களின் வேலைச் சூழல்கள், அவர்களின் அர்ப்ப ணிப்புகள், அவர்கள் எதிர்கொள் ளும் சமுதாயம் மற்றும் சட்டரீதி யான சவால்கள் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் நோக்கில் ‘சாஸி மாமா சிங்கப்பூர்’ எனும் பிள்ளை வளர்ப்பு இணையத்தளம் மே மாதத்தை ‘பணிப்பெண்களைப் போற்றும் மாத’மாக அனுசரிக்க இருக்கிறது.

ஆண்டுதோறும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாத மாக அக்டோபர் மாதமும் ஆண்களின் சுகாதார மாதமாக நவம்பரும் அனுசரிக்கப்படுவது போல, மே மாதம் பணிப்பெண் கள் மாதமாக அனுசரிக்கப்படும் என நம்புவதாக ‘சாஸி மாமா’ இணையத்தளத்தின் மூத்த பொறுப்பாசிரியர் கேட் மெக்ஃபர் லேன் கூறினார்.

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம், மே இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினம், மே 15ஆம் தேதி ஐநா அனைத்துலக குடும்ப தினம், மே 24ஆம் தேதி சிங்கப்பூர் கனிவன்பு தினம் என நான்கு முக்கிய நாட்கள் வரு வதால் பணிப்பெண்களைப் போற் றும் மாதமாக மே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு கருப்பொருள் என அடுத்த மாதத்தின் நான்கு வாரங்களிலும் பலதரப்பட்ட சேவைகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon