நோயாளிகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஃபேரர் பார்க் மருத்துவமனை

நோயாளிகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஃபேரர் பார்க் மருத்துவமனை

2 mins read

மருத்துவமனை, ஹோட்டல், கடை கள், மருத்துவ நிலையம் ஆகிய வற்றை உள்ளடக்கிய சிங்கப்பூரின் முதல் 'மெடிபிளெக்ஸ்' என அறி யப்படும் ஃபேரர் பார்க் மருத்துவ மனை திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன. $800 மில்லியன் செலவில் அதிநவீன தொழில்நுட்பம், முன்மாதிரி ஒருங் கிணைந்த உள்கட்டமைப்புடன் கூடிய இந்த மருத்துவ வளா கத்தைக் கட்டி முடிக்க ஐந்தாண்டு காலம் ஆனது. இதனால் மருத் துவச் சேவைகளை நாடி அதிக மான வெளிநாட்டவர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படி ஒரு மருத்துவமனை சிங் கப்பூரில் இருப்பதையே அறிந்து இருக்கவில்லை என்பதே உண்மை.

இம்மாதத் தொடக்கத்தில் வயிற்றுவலிக்காக அங்கு விரைந்த போது, அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் மருத்துவர் ஒருவர் காத்திருந்ததைக் கண்டு வியப்பு அடைந்தார் திருவாட்டி செரீன் சூ. "மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகள் மருத்துவருக்காகக் காத்திருப்பதுதான் வழக்கம். ஆனால், ஃபேரர் பார்க் மருத்துவ மனையில் நோயாளிக்காக மருத் துவர் காத்திருந்தார்," என்றார் அவர்.

அந்த மருத்துவமனையில் மொத்தம் 220 படுக்கைகள் இருக்கும் நிலையில் 90 படுக்கை கள்தான் பயன்பாட்டில் உள்ளன. அவசரகால சிகிச்சைப் பிரிவு கிட் டத்தட்ட காற்றாடுகிறது. பெரும் பாலான வாரங்களில் 50 முதல் 60 நோயாளிகள் மட்டுமே அங்கு வந்துசெல்கின்றனர். 23 படுக்கை களைக் கொண்டிருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாதி மட்டுமே நிரம்பியுள்ளது.

அம்மருத்துவமனை அமைந்து இருக்கும் இடமும் கட்டமைப்புக் குறைபாடுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. போதாதற்கு, மருத்துவச் சேவை நாடிவரும் சுற்றுப்பயணிகளை தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் ஈர்த்து வருவதும் ஒரு காரணம் என்று பகுப்பாய்வாளர்கள் சொல்கின் றனர்.