சமூக மன்றங்களில் கூடுதல் சட்ட ஆலோசனை நிலையங்கள்

சமூக மன்றங்களில் கூடுதல் சட்ட ஆலோசனை நிலையங்கள்

2 mins read

சட்ட ஆலோசனை தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு உதவும் நோக்கில் வரும் காலங்களில் அதிகமான சமூக சட்ட ஆலோ சனை நிலையங்கள் திறக்கப்படும் என பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்து இருக்கிறார்.

சமூக மன்றங்களில் செயல் படும் சட்ட ஆலோசனை நிலை யங்களையும் குடியிருப்பாளர் குழுக்களையும் ஒரே பொதுவான கட்டமைப்பின்கீழ் கொண்டுவர மக்கள் கழகமும் சிங்கப்பூர் வழக் கறிஞர்கள் சங்கத்தின் இலவச சட்ட சேவைகள் பிரிவும் நேற்று முன்தினம் புரிந்துணர்வுக் குறிப் பில் கையெழுத்திட்டன.

இதன்மூலம் வழக்குச் சுமை குறையும் என்றும் நிர்வாகச் செயல்திறன் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலவச சட்ட சேவை வழங் கும் வழக்கறிஞர்களுக்குக் காப் புறுதி அளிப்பதோடு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப் பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டத் துறை மாணவர்கள் அதி கமாகப் பங்களிக்கவும் இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு வழி ஏற் படுத்தித் தரும். சமூக சட்ட ஆலோசனை நிலையங்களின் தொண்டூழியர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்படும்.

சமூகத்தில் சட்ட உதவி தேவைப்படுவோருக்கு நீதியிடம் செல்ல வழி ஏற்படுத்தித் தருவதே இந்தக் கட்டமைப்பின் நோக்கம் என்றார், அந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அமைச்சர் இந்திராணி.

"இப்போதைக்கு இந்தக் கட்ட மைப்பின்கீழ் 15 சட்ட ஆலோ சனை நிலையங்கள் இயங்கி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது," என்று அவர் கூறினார்.

குடிமக்கள் அளிக்கும் கருத்து களின் அடிப்படையில், இலவச சட்ட சேவைக்கான தேவை அதி கமாக உள்ள சமூக மன்றங்களில் புதிய சட்ட ஆலோசனை நிலை யங்கள் திறக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

மொத்தமுள்ள 25 சட்ட ஆலோசனை நிலையங்கள் மூலம் கடந்த ஆண்டில் ஏறத்தாழ 2,000 குடியிருப்பாளர்கள் உதவி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.