அமைச்சர் ஓங்: புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை

அமைச்சர் ஓங்: புதிய சட்டங்கள் குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை

1 mins read
86a260a2-6e50-4c6a-8a57-4322c3598e54
சிங்கப்பூர் பௌத்த சம்மேளனத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி நீ ஆன் சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட விசாக தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புத்தர் சிலை மீது புனித நீர் ஊற்றும் கல்வி அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொய்ச் செய்தி தொடர்பான சட்டங்கள் பொய்ச் செய்திகளை உருவாக்குவோரைக் குறிவைத்தே வகுக்கப்பட்டுள்ளன, அவற்றைப் பரப்புவோரைக் குறித்து அல்ல என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். அந்தச் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை என்ற திரு இங், அச்சட்டங்கள் குறித்து அதிகாரி கள் மக்களுக்கு விரிவாக எடுத்து உரைப்பர் என்றும் சொன்னார். இணையவழிப் பொய்ச் செய் திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டமானது கண்ணோட்டங்கள், விமர்சனங்கள், நையாண்டிகள், பகடிகள் ஆகிய வற்றைக் குறிவைக்கவில்லை என்று அமைச்சர் இங் விளக்கி னார். நீ ஆன் சிட்டி சிவிக் பிளாசா வில் நேற்று நடந்த சிங்கப்பூர் பௌத்த சம்மேளனத்தின் விசாக தினக் கொண்டாட்டத்தில் திரு இங் கலந்துகொண்டார். அப்போது உரையாற்றிய அவர், பல்வேறு சமய, இன மக்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்ட முயலும் பேச்சுகளை, செயல்பாடு களைத் தடை செய்ய கடுமையான சட்டங்கள் இருக்க வேண்டியது முக்கியம் என்றார். "இணையவழிப் பொய்ச் செய்தி களால் சமுதாயத்திற்கு ஊறு விளையாமல் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்," என்றார் அமைச்சர். முன்மொழியப்பட்டுள்ள சட்டங் கள், ஒரு கூற்று பொய்யானதா அல்லது தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறதா, பொதுநல னுக்கு எதிரானதா என்பதைத் தீர் மானிக்கும் அதிகாரத்தை எல்லா அமைச்சர்களுக்கும் வழங்கக் கூடும். அப்படி இருக்கும் பட்சத் தில் அந்தச் செய்தியில் திருத்தம் செய்யும்படி அல்லது முற்றிலுமாக அகற்றிவிடும்படி அறிவுறுத்தப்பட லாம்.