அமைச்சர் சண்முகம்: முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு உதவ பல திட்டங்கள்

அமைச்சர் சண்முகம்: முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினருக்கு உதவ பல திட்டங்கள்

2 mins read
92f98749-98c4-47de-99cb-f3e3f14b88f3
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். ST PHOTO: ONG WEE JIN -

முன்னோடித் தலைமுறையினரும் மெர்டேக்கா தலைமுறையினரும் தங்களது வாழ்க்கைச் செலவு களைச் சமாளிக்க உதவும் பல திட்டங்கள் இருப்பதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் உறுதியளித்துள்ளார்.

"நமது மூத்த குடிமக்கள் நாட் டிற்காக ஏராளமானவற்றைச் செய் துள்ளனர் என்பதை நாம் அறிந் துள்ளோம். அவர்களை அக்கறை யோடு கவனித்துக்கொள்வோம்," என்று திரு சண்முகம் கூறினார்.

சுகாதாரப் பராமரிப்புச் செலவு களைச் சமாளிக்க ஆதரவு, நீண்ட காலப் பராமரிப்பு, நடமாட்டத்திற் கான உதவிகள், வருமானத் துணைநலன்கள் ஆகியவற்றை அமைச்சர் சுட்டிப் பேசினார்.

எடுத்துக்காட்டாக, 2,000 வெள்ளிக்கும் குறைவாக மாத வருமானம் ஈட்டும் முதிய ஊழியர் களுக்கு அரசாங்கம் ஆண்டிற்கு $6,640 வரை உதவி வழங்குகிறது. இவ்வாண்டு வரவுசெலவுத் திட் டத்தில் அறிவிக்கப்பட்ட இருநூற் றாண்டு நிறைவு போனஸ் மூலம் குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு $300 வரை ரொக்க உதவி வழங்கப்படும்.

நீ சூன் குழுத்தொகுதியைச் சேர்ந்த சமூக நிறுவனம், வசதி குறைந்த 1,160 குடும்பங்களுக்குத் தலா $200 ஃபேர்பிரைஸ் பற்றுச் சீட்டுகளை நேற்று வழங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அமைச்சர் சண்முகம் இவ்வாறு பேசினார்.

ஃபுட்சால்அரீனா@ஈசூன் ஈட்டிய ஏறத்தாழ $250,000 உபரி வருவாயைக் கொண்டு இந்தப் பற்றுச்சீட்டுகள் பெறப்பட்டன.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நீ சூன் விளையாட்டு மையத் தில் ஃபுட்சால், கூடைப்பந்துத் திடல்கள் போன்ற விளையாட்டு வசதிகளை அந்தச் சமூக நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

'எம்பிசி@காத்திப்'பில் நேற்று பிற்பகல் நடந்த உணவு விருந்து நிகழ்ச்சியின்போது நீ சூன் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் களான திரு சண்முகம், சமுதாய, குடும்ப மேம்பாடு மற்றும் கல்வி அமைச்சுகளின் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் இணைப் பேராசிரியர் ஃபைசால் இப்ராஹிம், திருவாட்டி லீ பீ வா, திரு லுயிஸ் இங் ஆகியோர் குடியிருப்பாளர் களுக்குப் பற்றுச்சீட்டுகளை வழங்கினர்.