சுடச் சுடச் செய்திகள்

நோயாளிகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஃபேரர் பார்க் மருத்துவமனை

மருத்துவமனை அமைந்து இருக்கும் இடமும் கட்டமைப்புக் குறைபாடுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நோயாளிகளுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் ஃபேரர் பார்க் மருத்துவமனை

மருத்துவமனை, ஹோட்டல், கடைகள், மருத்துவ நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய சிங்கப்பூரின் முதல் ‘மெடிபிளெக்ஸ்’ என அறி யப்படும் ஃபேரர் பார்க் மருத்துவமனை திறக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகிவிட்டன.  $800 மில்லியன் செலவில் அதிநவீன தொழில்நுட்பம், முன்மாதிரி ஒருங் கிணைந்த உள்கட்டமைப்புடன் கூடிய இந்த மருத்துவ வளா கத்தைக் கட்டி முடிக்க ஐந்தாண்டு காலம் ஆனது. இதனால் மருத்துவச் சேவைகளை நாடி அதிக மான வெளிநாட்டவர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலானவர்கள் இப்படி ஒரு மருத்துவமனை சிங் கப்பூரில் இருப்பதையே அறிந்து இருக்கவில்லை என்பதே உண்மை. 

இம்மாதத் தொடக்கத்தில் வயிற்றுவலிக்காக அங்கு விரைந்த போது, அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலில் மருத்துவர் ஒருவர் காத்திருந்ததைக் கண்டு வியப்பு அடைந்தார் திருவாட்டி செரீன் சூ. “மற்ற மருத்துவமனைகளில் நோயாளிகள் மருத்துவருக்காகக் காத்திருப்பதுதான் வழக்கம். ஆனால், ஃபேரர் பார்க் மருத்துவமனையில் நோயாளிக்காக மருத் துவர் காத்திருந்தார்,” என்றார் அவர். அந்த மருத்துவமனையில் மொத்தம் 220 படுக்கைகள் இருக்கும் நிலையில் 90 படுக்கை கள்தான் பயன்பாட்டில் உள்ளன. அவசரகால சிகிச்சைப் பிரிவு கிட்டத்தட்ட காற்றாடுகிறது. பெரும் பாலான வாரங்களில் 50 முதல் 60 நோயாளிகள் மட்டுமே அங்கு வந்துசெல்கின்றனர். 23 படுக்கை களைக் கொண்டிருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாதி மட்டுமே நிரம்பியுள்ளது.

மருத்துவமனை அமைந்து இருக்கும் இடமும் கட்டமைப்புக் குறைபாடுமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. போதாதற்கு, மருத்துவச் சேவை நாடிவரும் சுற்றுப்பயணிகளை தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் ஈர்த்து வருவதும் ஒரு காரணம் என்று பகுப்பாய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஃபேரர் பார்க் மருத்துவமனை குறித்த அறிவிப்பு 2008ல் வெளியானபோது, 2012ஆம் ஆண்டுவாக் கில் சிங்கப்பூர் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கும் என அரசாங் கம் மதிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று, ஒவ்வோராண்டும் வெளி நாட்டவர்கள் 500,000 பேர்தான் மருத்துவச் சேவை நாடி சிங்கப் பூருக்கு வந்து செல்கின்றனர்.
இதையடுத்து, நிலைமையைச் சமாளிக்கத் தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருவதாக ஃபேரர் பார்க் மருத்துவமனை தெரிவித்துள்ளது. எடுத்துக்காட் டாக, நடைமுறைச் செலவுகளைக் குறைவாக வைத்திருக்க, கட்டம் கட்டமாக அம்மருத்துவமனை திறக்கப்பட்டு வருவதாக அதை நடத்தும் ‘தி ஃபேரர் பார்க் கம்பெனி’யின் தலைவர் பேரா சிரியர் மௌரிஸ் சூ கூறினார்.
அம்மருத்துவமனையில் இப்போது 600 பேர் பணிபுரிகின்றனர். 

ஹோட்டல் ஊழியர்களையும் சேர்த்தால் 1,000 பேர் வரை இருப்பர். நடைமுறைச் செலவுகள், கடந்த ஆண்டில் ஈட்டிய வருவாய் எவ்வளவு போன்ற விவரங்களைத் தெரிவிக்க மருத்துவமனை நிர் வாகம் மறுத்துவிட்டது.

நோயாளிகளின் நம்பிக்கையைப் பெற்று, தனக்கான நோயாளிகள் கட்டமைப்பை உருவாக்க சற்று காலமாகலாம் என்றார் திரு சூ. 2015 இறுதியில் திறக்கப்பட்ட அந்த மருத்துவமனை கடந்த வாரம் வரை 170 இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சைகளை வெற்றி கரமாகச் செய்து முடித்துள்ளது. அந்த அறுவைச் சிகிச்சையைச் செய்துகொண்ட நோயாளிகள் எவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon